Sunday, July 7, 2019

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க.,வினர் இன்று வேட்பு மனு.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று முடிவடைகிறது.அ.தி.மு.க., வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன், பா.ம.க., வேட்பாளர், அன்புமணி ஆகிய மூவரும், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், தங்கள் வேட்புமனுக்களை, இன்று, தாக்கல் செய்ய உள்ளனர். தமிழகத்தில், ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும், 18ல் தேர்தல் நடக்க உள்ளது. 
 ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க.,வினர் இன்று வேட்பு மனு
தற்போதுள்ள, எம்.எல்.ஏ.,க்களின் அடிப்படையில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு, தலா, மூன்று எம்.பி.,க்கள் கிடைப்பர்.போட்டியின்றி, ஆறு எம்.பி.,க்களும், தேர்வு செய்யப்படுவதற்கு வசதியாக, இரு கட்சிகளும், தலா, மூன்று வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. தி.மு.க.,வின் மூன்று இடங்களில், ஏற்கனவே, ம.தி.மு.க.,வுக்கு, ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.ம.தி.மு.க., சார்பில், பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., சார்பில், தொழிற்சங்க பொதுச்செயலர், சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 

அ.தி.மு.க., வேட்பாளர்களாக, சிறுபான்மையினர்நலப்பிரிவு இணை செயலர், முகமது ஜான், மேட்டூர்நகர செயலர், சந்திரசேகரன் ஆகியோர், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தலின் போது செய்த ஒப்பந்தப்படி, பா.ம.க.,வுக்கு ஒரு இடத்தை, அ.தி.மு.க., ஒதுக்கியது. பா.ம.க., வேட்பாளராக, அக்கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளர்கள், முகமது ஜான், சந்திரசேகரன், பா.ம.க., வேட்பாளர் அன்புமணி ஆகிய மூவரும், இன்று, வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 

இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, நாளை நடக்கிறது. வரும், 11ம் தேதி, வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். தேர்தலில் போட்டியில்லை என்பதால், காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., இடங்களில், அ.தி.மு.க.,வுக்கு - 2; பா.ம.க., - 1; தி.மு.க., - 2; ம.தி.மு.க., - 1 என, இரு அணிகளுக்கும், தலா, மூன்று இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.வரும், 11 மாலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்; 18ல், வெற்றி பெற்ற எம்.பி.,க்கு சான்றிதழ் வழங்கப்படும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...