Friday, July 5, 2019

உங்கள் பணம் உங்களுக்கே ! எப்படி?

மின் வாரிய விதியெண் 21-ன் படி நமது வீட்டிலோ அலுவலகத்திலோ மின் இணைப்பு பழுது ஏற்பட்டு சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் உள்ள புகார் ஏட்டில் 10 இலக்க இணைப்பு எண் எழுதி வைத்தால்,

நமது வீடு மாநகரப்பகுதிக்குள் இருந்தால் 1 மணி நேரத்திற்க்குள்ளாகவும்,
நகராட்சி பகுதியெனில் 3 மணி நேரத்திற்க்குள்ளாகவும்,
கிராமப் பகுதியெனில் 6 மனிநேரத்திற்க்குள்ளாகவும்,
கிராம பகுதியெனில் 6 மணி நேரத்திற்க்குள்ளாகவும் வந்து சரி செய்திட வேண்டும். இல்லையென்றால தாமதிக்கும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 50 ரூ. வீதம், அதிகபட்சம் 2000 ரூ. வரை நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
அத்தொகை நமக்கு பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்பட மாட்டாது. நமது மின் கட்டண தொகையில் கழிக்கப்படும்.
இதற்கான இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட மின் கம்பியாள் (Line Man ),அவரது மேலதிகாரி அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நம் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் பணம் உங்களுக்கே ! எப்படி ?
“தமிழ்நாடு மின்சாரப் பகிர்மானச் செயல்திறத் செந்தரங்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் Tamilnadu Electricity Distribution Standards of Performance Regulations” ன் படியான விதி 21(Regulation 21 of DSPR) ஆகும்... இந்த விதி முறை எவருக்கும் தெரியாததனால் பயன்படுத்தி இழப்பு கேட்பதில்லை..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...