''தி.மு.க.,விற்கு, குடும்ப முன்னேற்ற கழகம் என, பெயர் வைத்துக் கொள்ளலாம்,'' என, பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அவர், நேற்று அளித்த பேட்டி:காஞ்சிபுரம் சங்கர மடத்தை கிண்டல் செய்தவர், கருணாநிதி. இன்று, அவற்றை மிஞ்சுகிற வகையில், கருணாநிதிக்கு பின், ஸ்டாலின் நன்றாக அரசியல் செய்கிறார்.உதயநிதியை, இளைஞர் அணி செயலராக அறிவித்து, பட்டம் சூட்டி உள்ளனர். தி.மு.க.,வில் அதிகார மையங்கள், ஒரே குடும்பத்தில் குவிந்துள்ளன. தி.மு.க.,வில், காலம் காலமாக கஷ்டப்பட்ட தொண்டர்களுக்கு மதிப்பில்லை.
அ.தி.மு.க.,வில், சாமானியர்கள் முதல்வராகவும், துணை முதல்வராகவும் உள்ளனர். தி.மு.க.,வில், உதயநிதியை விட, நல்ல தலைவர்கள் உள்ளனர். எந்த தகுதியும் இல்லாத உதயநிதிக்கு, ஸ்டாலின் மகன் என்பதால், பதவி வழங்கப்பட்டுள்ளது.தி.மு.க., என்பதற்கு பதிலாக, குடும்ப முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, ராஜேந்திர பாலாஜி கூறினார்.
No comments:
Post a Comment