நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும்.
அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும்.
மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா, 10 அடியும், 100 முதல் 150 அடின்னா 15 அடியும் விடணும். அதேமாதிரி வீட்டுக்கு ரெண்டு பக்கமும் 5 அடி விடணும். மனையைச் சுத்தி இடம் விடச் சொல்றது வண்டி நிறுத்த… நல்ல காத்தோட்டமா இருக்கறதுக்கு, மரம் செடி வளர்க்க… இதுக்காகத்தான்.
அதாவது மனைக்கு முன்னால் 30 அடி ரோடு, மனை அளவு நீளத்தில் 40 அடி, அகலத்தில் 30 அடின்னா மொத்தமுள்ள 1,200 சதுர அடியில் முன்பக்கம் 5 அடி, பின்பக்கம் 5 அடி, ரெண்டு சைடிலும் தலா 5 அடி விட்டது போக மீதியுள்ள இடத்தில்தான் வீட்டைக் கட்டமுடியும். அதாவது 600 (20 x 30) அடியில்தான் வீடு கட்டமுடியும். மனையோட மொத்தப் பரப்பளவில் 50% மட்டும்தான் கட்டடம் கட்டுறதுக்கு அனுமதி கிடைக்கும். மனையின் பரப்பு கூடுதலாகும்போது நாம கட்டுற இடத்தின் அளவும் கூடும். 2,400 (60 x 40) ச.அடி. மனையில் 1,350 (45 x 30) ச.அடி. பரப்பில் கட்டலாம்.
No comments:
Post a Comment