Monday, July 8, 2019

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி.

தற்போது இந்தியா முழுவதும் அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதே மசோதா கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது. புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்கப்பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது
புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிகப்படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி விவரங்கள் பின்வருமாறு
1) சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு ரூ.25,000/-அபராதம், மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
2) தலை கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.100/- முதல் ரூ.1000/- வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து.
3) சீட் பெல்ட் போடாமல் செல்பவர்களுக்கு ரூ 100 முதல் ரூ 1000 வரை அபராதம் வசூலிக்கப்படும்
4) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 5000 வரை அபராதம். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள், அதை மீறி வாகனம் ஓட்டினால் ரூ 500 இல் இருந்து ரூ 10000 வரை வசூலிக்கப்படும்.
5) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10000 வரை அபராதம்.
6) வாகன பந்தயதில் ஈடுபடுவோருக்கு ரூ 5000 வரை அபராதம்.
7) குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக பளு ஏற்றி சென்றால் டன்னுக்கு தலா ரூ 2000 வரை வசூலிக்கப்படும்.
விரைவில் இந்த புதிய வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையிலும், மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...