அன்புள்ள ஆச்சி மசாலா ஓனர் ஐசக் அவர்களுக்கு,
டிவி விளம்பரத்தில் லலிதா ஜொள்ளரி ஓனருக்கு கடும் போட்டியைத்தரும் உங்களுக்கு வாழ்த்துகள்.
ஒரு நாளைக்கி ஆயிரம் தபா டிவியில் வந்து 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்ல்ல்'னு எம்.ஜி.ரோட ரீமேக் பாட்டை பாடிட்டே இருக்கீங்களே... அப்படி என்னதான் உங்க ஆச்சி மசாலாவுல இருக்குன்னு பாக்க நேத்து எங்க ஏரியா அண்ணாச்சி கடைல 10 ரூபாய் புளியோதரை பாக்கெட்டை வாங்குனேன்.
இந்த பாக்கெட்ல இருக்கறது 'புளி'ப்பொடிதான். புளியோதரைப்பொடி இல்லைன்னு வீட்ல சொல்லிட்டாங்க. இதைவிட GRB கம்பெனியோட புளியோதரைப்பொடி நல்லா இருக்கு. சாதத்துல பொடியை மட்டும் கலந்தா போதும். சுவையான புளியோதரை ரெடி.
ஆனா நீங்க ஏகப்பட்ட சமாச்சாரத்தை கலக்க சொல்றீங்க. டேஸ்ட்டும் சுமாராத்தான் இருக்கு.
நம்ம லலிதா ஜொள்ளரி ஓனர் சொன்ன மாதிரி ரெண்டு மசாலாவையும் வாங்குங்க. அதை தனித்தனியா சாதத்துல கலந்து சாப்புட்டு பாருங்க. எது சிறப்பா இருக்குன்னு 'உண்மையை' சொல்லுங்க.
அவசியப்பட்டா ஆச்சி புளியோதரை மசாலாவை இன்னும் சிறப்பா தயார் செய்யுங்க.
எல்லா வளமும் இருக்க வேண்டும் இந்த ஆச்சி மசாலாவில்ல்ல்...!!!
No comments:
Post a Comment