Tuesday, July 2, 2019

சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கண்காணிப்பு கமிஷன்.

காங்கிரசை சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர், ப.சிதம்பரம் மீதான மோசடி வழக்கில், அவர் மீது வழக்கு தொடர, மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன், ஐந்து மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கிறது.
சிதம்பரம்,நடவடிக்கை,காத்திருக்கும்,கண்காணிப்பு கமிஷன்

மத்திய அரசு அனுமதி அளிக்காததால், சிதம்பரம் உட்பட, பலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு, இப்போது தலைவர் இல்லை. எனினும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்தபடியே உள்ளன. ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதி பெற, சலுகை காட்டியதாக, சிதம்பரம் மீது புகார் உள்ளது.

மன்மோகன் சிங் பிரதம ராக இருந்த போது, நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு சலுகை அளித்ததாக, சி.வி.சி., கண்டறிந்தது. அவர் மீதும், அதற்கு ஒப்புதல் அளித்த, 'நிடி ஆயோக்' முன்னாள் தலைவர், சிந்துஸ்ரீ குல்லார் மீதும் நடவடிக்கை எடுக்க அனுமதிக்குமாறு, மத்திய பணியாளர் நலத்துறையிடம், ஜனவரி மாதம், சி.வி.சி., அனுமதி கோரியது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. 

ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், அனுமதி கிடைக்காததால், சிதம்பரம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக, சி.வி.சி., வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. ஏற்கனவே, இந்த முறைகேடு தொடர்பாக, சிதம்பரத்திடம், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.  அதுபோல, ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் மகனும், சிவகங்கை தொகுதி, காங்., - எம்.பி.,யுமான கார்த்தி மீதும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க இயக்குனரகம் போன்ற அமைப்புகள் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றன.

மத்திய அரசின் பல பொறுப்புகளில் இருந்த, ௧௦௦க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, அனுமதிக்காக, சி.வி.சி., காத்திருக்கிறது. சிதம்பரம் இப்போது, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார்; மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அவர், எம்.பி.,யாக தேர்வாகி உள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...