Sunday, July 21, 2019

என்னிடம் கேள்விகள் எதுவும் இல்லை.

மெளலிங்க புட்டா என்று ஒருவன் புத்தரிடம் வந்து நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போனான்.
புத்தர் சொன்னார்.
நீ ஒரு வருடம் பொறுத்திரு.
அதன் பிறகு உன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்.
இந்த ஒரு வருடத்திற்கு
நீ என்னைப் பின்பற்றி வர வேண்டும்..
நான் என்ன சொன்னாலும்,
எந்தவிதக் கேள்விகளும் கேட்காமல்,
விவாதம் செய்யாமல்,
அதைப் பின்பற்ற வேண்டும்.
உன்னுடைய கேள்விகளைத் தள்ளி வைத்துவிடு.
ஒரு வருடத்திற்கு என்னுடன் இருந்து,
அதை அனுபவித்து வா.
ஒரு வருடம் முடிந்தவுடன் உன் கேள்விகள் அனைத்தையும் கேள்
நான் அப்போது விடையளிக்கிறேன்.
புத்தர் இவ்வாறு மெளலிங்கபுட்டாவுக்கு சொல்லிக் கொண்டிருந்த போது புத்தருடைய சிஷ்யர்களில் ஒருவரான சாரிபுத்ரன் சிரிக்க ஆரம்பித்தான்.
மெளலிங்கபுட்டாவுக்கு சங்கடமாக இருந்தது.
அவன் சாரிபுத்ரனைப் பார்த்துக் கேட்டான்.
நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?
என்ன தவறு நடந்து விட்டது?
சாரிபுத்ரன் சொன்னார்.
ஏமாந்து போய்விடாதே.
இவர் உன்னை ஏமாற்றுகிறார்.
இவர் இதே மாதிரிதான் என்னை ஏமாற்றினார்.
இப்போது என்னால் எதுவும் கேட்க முடியாது.
ஆகவே அவர் எனக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.
நீ கேட்க விரும்பினால்,
இப்போது கேள் .
ஒரு வருடம் கழித்து கேட்பது தாமதமாகிவிடும்.
ஒரு வருடம் கழிந்தது.
மெளலிங்க புட்டா காத்திருந்தான்.
தியானம் செய்தான்.
மெள்ள மெள்ள அனமதியானான்.
இப்போது சாரிபுத்ரன் ஏன் சிரித்தான் என்பதைப் புரிந்து கொண்டான்.
ஏனெனில் கேள்விகள் மறைந்து கொண்டு வந்தன....
ஒரு வருடம் கழிந்த பின்னர்
அவன் புத்தரைக் கண்டால் ஒளிந்து கொள்வான்.
ஏனெனில் அவன் புத்தரைச் சந்தித்தால் புத்தர் கேட்பார்,
#உன்னுடைய_கேள்விகள்_எங்கே?
ஆனால் புத்தர் ஞாபகத்தில் வைத்திருந்தார்.
சரியாக ஒரு வருடம் முடிந்ததும்
முடிந்த நாளன்று ஆயிரக்கணக்கான சந்நியாசிகளில் அவன் மறைந்து கொண்டு இருக்கும் போது புத்தர் கேட்டார்.
மெளலிங்க புட்டா எங்கே?
அவன் இப்போது இங்கே வரட்டும்.
அவன் கேள்விகள் எல்லாவற்றையும் கேட்கட்டும்.
நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
மெளலிங்க புட்டா எழுந்து சொன்னான்.
நீங்கள் உண்மையிலேயே ஏமாற்றிவிட்டீர்கள்.
சாரிபுத்ரன் சொன்னது சரியாக இருக்கிறது.
ஏனெனில் இப்போது என்னிடம் கேள்விகள் எதுவும் இல்லை.
புத்தர் சொன்னார்.
#அனுபவம் ....
நீங்கள் அனுபவித்தேன் என்று கூட சொல்ல முடியாது.
ஏனெனில் யார் அனுபவிப்பது ?
வேறு யாருமில்லை.
யார் யாரை அனுபவிப்பது?
கடவுள் அனுபவம் என்று எதுவுமில்லை. இப்படி அறியாதவர் மனதில் #நான் இருக்கும்
அறிந்தவனுக்குத் தெரியும்.
கடவுள் மறைந்து விட்டார்
#நான் மறைந்து விட்டது.
இருமைத்தன்மை மறைந்து விட்டது.
அறிதல் அங்கே இருக்கிறது
ஆனால் அறிபவர் இல்லை.
அறியப்படுவது இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...