Friday, March 13, 2020

மைக்ரோசாப்ட் இயக்குனர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகல்.

 உலகின் மிகப்பெரிய மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினை பில்கேட்சும், பவுல் ஜிஆலன் ஆகிய இருவரும் 1975-ம் ஆண்டு நிறுவினர்.இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சத்ய நாதெல்லா உள்ளார். பில்கேட்ஸ் இயக்குனர் குழு (போர்ட் ஆப் டைரக்டர்ஸ்,) மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் என்ற பொறுப்பையும் வகித்து வருகிறார்.

இந்நிலையில் மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் (போர்ட் ஆப் டைரக்டர்ஸ்,) இயக்குனர் குழு பொறுப்பிலிருந்து பில்கேட்ஸ் விலகுவதாகவும், தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.



பில்கேட்ஸ் 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியா உள்பட பல நாடுகளில் மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ஊட்டச்சத்துகளை அளிப்பதிலும், வாழ்வியலை அழகானதாக மாற்றும் துாய்மை ஆகிய சேவைகளை செய்து வருகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...