Thursday, July 28, 2022

வள்ளலார் கொள்கைகளில் முதன்மையானது எது !

 வள்ளலார் கொள்கைகளில் முதன்மையானது கடவுள் ஒருவரே என்பதுதான் .

அந்தக் கடவுள்தான் அருட்பெருஞ் ஜோதி என்பதாகும்.
வள்ளலார் காட்டியக் கடவுள் என்பவர் .. பலகோடி அண்டங்களையும் உலகங்களையும்,
நிலம்,
தண்ணீர்,.
அக்கினி,
காற்று,
ஆகாயம், மற்றும் சூரியன் ,சந்திரன், நட்சத்திரம் போன்ற கிரகங்களையும்.
உலகில் உள்ள அணுக்களையும்,அணுக்களால் உருவாக்கப்படும் உருவங்களையும்.
உருவங்களுக்கு முதற்க் காரண காரியமாக இருக்கும் ஆன்மாக்களையும்,,
தோற்றம் மாற்றங்களை செயல்படுத்தும் மாயை என்னும் அதிகாரிகளையும்,
படைத்து,காத்து,
அழித்துக் கொண்டும் தோற்றம்,
மாற்றங்களை இடைவிடாமல் செய்து கொண்டு இருக்கும் அருள் ஒளியே அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுளாகும்.
இந்தக் கடவுள் இதற்கு முன்பு ,
சமய மதங்களில் சொல்லிய கடவுள்களில் ஒருவர் அல்ல !
வேதம் ஆகமம்,
புராணங்களில்,
மற்றும் இதிகாசங்களில் சாத்திரங்களில் சொல்லிய கற்பனைக் கடவுள்கள் அல்ல ! என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் காட்டியக் கடவுள்தான் உண்மையானக் கடவுள் !
வள்ளலார் காட்டிய கடவுளை,
கோவில்களிலோ, ஆலயங்களிலோ மசூதிகளிலோ,சர்ச்சுகளிலோ, பிரமிட்டுகளிலோ,வேறு எங்கும் காணமுடியாது.
எல்லா உயிர்களிலும்,
உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு இருப்பதுவே ஆன்மா என்னும் உள் ஒளியே கடவுளின் ஏகதேசமாகும் .
ஆதலால் உயிர்களிடத்தில் அன்பு,
தயவு,
கருணை
செலுத்தினால் மட்டுமே கடவுளை அறியமுடியும் உணரமுடியும்.
வேறு வகையால் கடவுளைக் காணவும் முடியாது,வெளியே யாராலும் காட்டவும் முடியாது.
இந்த உண்மையை வள்ளல்பெருமான் உலக மக்களுக்கு தெளிவுப் படுத்தி உள்ளார்.
வள்ளல்பெருமான் கொலகைகளில் முதன்மையானது உண்மையானக் கடவுள் யார் ?
என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
அக்கடவுளை தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம்,
சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டு இருப்பதால் .அவைகள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டும் மறைத்துக் கொண்டும் இருக்கின்றது .
அதற்கு அறியாமை என்னும் திரைகள் என்று பெயர்.அந்த திரைகள் உண்மையான மெய்ப்பொருளை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் வள்ளல்பெருமான்
அறியாமை என்னும் திரைகள் எப்பொழுது நீங்குகிறதோ அப்போதுதான் கடவுளின் உண்மை சொரூபம் என்னவென்று தெரியும்.,கருணை என்னும் கருவியைக் கொண்டுதான் திரை மறைப்பை நீக்க முடியும்...
வேறு எந்த வகையாலும் ,வேறு எந்த வழிகளாலும் திரைகளை நீக்க முடியாது என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான அழுத்தமான செய்திகளாகும்.
கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார்.
எனவே உண்மைக்கடவுள் யார் ?என்பதை முதலில் அறிந்து தெரிந்து கொள்வது வள்ளலாரின் கொள்கைகளின் முதன்மையானது என்பதை சன்மார்க்க அன்பர்களும்,மற்றும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு ,
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற்று,
இல்லறம் நல்லறமாக மகிழ்சியுடன் வாழ்வோம்.
May be an image of 1 person

மதச்சார்பு அறங்காவலர்; மதச்சார்பற்ற அறங்காவலர் : ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் நீண்ட கால சர்ச்சை.

 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையாகி உள்ளது.


கோவில் இயங்கும் நேரம் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ள அந்த அறிவிப்பு பலகையில், 'மா.வெள்ளைச்சாமி, செயல் அலுவலர்; ஆர்.சம்பத், மதச்சார்பு தர்மகர்த்தா; ஸ்ரீ வாரி கே.ஸ்ரீதர், மதச்சார்பற்ற தர்மகர்த்தா' எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது தான் சர்ச்சைக்கு காரணம்.இது குறித்து, கோவில் நிர்வாக தரப்பினர் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலை, ஹிந்து அறநிலையத் துறை தான் நிர்வகித்து வருகிறது.முன்பு, தென் கலை ஐயங்கார்களுக்கு சொந்தமான கோவிலாக இருந்ததால், கோவில் நடைமுறை மற்றும் மரபுகளின் அடிப்படையில், அறங்காவலர்களில் ஒருவர் தென் கலை ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
மற்றொரு அறங்காவலர், எந்த ஜாதியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இதில், தென் கலை ஐயங்கார் வகுப்பை சேர்ந்த அறங்காவலரை, எப்படி குறிப்பிடுவது என, பல ஆண்டுகளுக்கு முன், கோவில் நிர்வாக தரப்பினர் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.அதன்படி, தென் கலை வகுப்பைச் சேர்ந்த ஐயங்கார், 'மதச்சார்பு அறங்காவலர்' என அறிவிக்கப்பட்டார். மற்றொருவர், 'மதச்சார்பற்ற அறங்காவலர்' என குறிப்பிடப்பட்டார். இந்த நடைமுறை தான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதச்சார்பு அறங்காவலராக உள்ள சம்பத், 2020ம் ஆண்டு ஆக., 28ல் நியமிக்கப்பட்டார். அவருக்கு முன், அந்த பொறுப்பில் மணவாள பாஷ்யம் என்பவர் இருந்துள்ளார்.மதச்சார்பு மற்றும் மதச்சார்பற்ற அறங்காவலர்களை, 'பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள்' என, அறநிலையத் துறை ஆவணங்களில் குறிப்பிட்டு, நியமன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
காலம் காலமாக நடந்து வருவதால், இந்த நடைமுறையை யாரும் மாற்ற முயற்சிக்கவில்லை.இவ்வாறு கோவில் நிர்வாக தரப்பினர் கூறினர்.


பெயர் பிரச்னைக்கு தீர்வு என்ன?



ஆலயங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், தென் கலை சம்பிரதாய கோவில்.
கோவில் நடைமுறை மற்றும் மரபுகளின் அடிப்படையில், கோவில் நிர்வாக பொறுப்புக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்களில் ஒருவர், தென் கலை ஐயங்காராகவும், மற்றொருவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

அதேநேரம், தென் கலை ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவரை, 'மதச்சார்பு அறங்காவலர்' எனவும், மற்றொருவரை, மதச்சார்பற்ற அறங்காவலர் எனவும் சொல்வது நெருடலாக உள்ளது. இது, தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக, 'தென்கலை சம்பிரதாய அறங்காவலர்' என்றும், ஹிந்து மத சார்பிலான அறங்காவலர் அல்லது பொது தர்மகர்த்தா என்றும் அழைக்க, அறநிலையத் துறை ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

 மதச்சார்பு அறங்காவலர்; மதச்சார்பற்ற அறங்காவலர்  ,ஸ்ரீபெரும்புதுார் கோவில் ,நீண்ட கால சர்ச்சை

வாழ்க்கையில் ஒரே விஷயம் தான் யாரையும் உங்கள் எதிர்காலத்திற்காக நம்பி விடாதீர்கள்.

 அப்பா , அம்மா , அண்ணன் , அக்கா , தம்பி , தங்கை , மாமன் , மச்சான் , பெரியப்பா , சித்தப்பா , நண்பர்கள் என யாரையும் , யார் சிபாரிசையும் எதிர்காலத்திற்கு நம்பி விடாதீர்கள்.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் மட்டுமே ,
யாரையும் நம்பி ஒப்படைத்து வீணாக்கி விடாதீர்கள்.
அனைத்தும் என் சுய அனுபவம் தான்.
அன்பு என்பது வேறு .
அது யாரும் உங்களுக்கு குறை வைக்க மாட்டார்கள்.
நீங்களும் யாரிடமும் அன்பாக இருப்பதில் குறை வைக்காதீர்கள்.
ஒரு வேளை உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது , யாருக்கேணும் பண உதவியோ , அல்லது வேலை வாய்ப்புகளை பெற்று தர முடியும் என்றாலோ தாராளமாக செய்யுங்கள்..
ஆனால் , யாரும் , திரும்பி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர்கள்.
நியாயமாக எனக்கு தாய் , தந்தை வழியில் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்கவில்லை .
அனைத்தும் தானம் அளித்துவிட்ட வள்ளல்கள்.
அதற்காக சண்டையிட்டு நிம்மதியை தொலைக்க நானும் விரும்பவில்லை.
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக ஏமாந்த பணத்தோடும் , வியாபாரத்திலும் இழந்த லட்சங்களோடு அதையும் சேர்த்து விட்டேன்.
யாராவது எனது இழப்புகளை பற்றி பேசினால் கையெடுத்து கும்பிட்டு நானே மறந்துட்டேன்.
நியாபகப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.
இழந்தவைகளை நினைத்தால் இப்பொது இருக்கும் மகிழ்ச்சியையும் கெடுத்து விடும் .
இழப்புகளை விட அதிகம் நம்மால் பெற்று விடவும் முடியும் .
தொழிலில் பார்ட்னர்கள் எப்போது மாறுவர்கள் எதிரியாக மாறுவார்கள் என்றும் தெரியாது.
அதனால் நெருங்கியவர்கள் பார்ட்னராக இருப்பதை விட தொழில் நிமித்தமான நண்பர்களே சிறந்தது. உனக்கும் எனக்கும் பிசினஸ் தவிர வேறு ஒன்றும் இல்லை.
என்னை நீ ஏமாற்றாதே ! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன்.
இன்னொரு தொழிலில் நீ யாரை வேண்டுமானலும் சேர்த்துக் கொள் ,
அது போல் நான் வேறு தொழிலில் பார்ட்னரை மாற்றினாலும் நீ கண்டுக்கொள்ளாதே. என்றளவில் இருப்பவர்களுடன் கூட்டு சேருங்கள்.
பிரான்ஸிலிருக்கும் மாமா வேலை வாங்கி தருவார் , தலைமை செயலகத்தில் இருக்கும் சித்தப்பா அரசு வேலை வாங்கி தருவார் , மந்திரியின் நெருங்கிய நண்பரான மச்சான் மூலம் வேலைவாய்ப்பை பெறலாம் என்று காத்திருக்காதீர்கள்.
ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியே.
எனக்கு இதை விட பெரிய பின்புலம் இருந்தும் பலர் வாக்களித்தும் எதுவும் நிகழவில்லை.
அடுத்த ஆட்சியில் நிச்சயம் செய்து தருகிறேன் என்று சொன்னார்கள்
அவர்களே அடுத்த ஆட்சியில் இருப்பார்களா என்று தெரியவில்லை.
கருணாநிதி வீட்டில் கடைசி ஊழியர் கூட பெரும் கோடீஸ்வரனாய் இருந்துள்ளார் ,
ஆனால் , கருணாநிதியின் மூத்த மகன் முத்து நீண்ட காலம் வறுமையில் வாடியவர். இன்று கூட அவர்களின் சொத்து திமுக கவுன்சிலரை விட குறைவு தான்.இதையும் நினைவில் வையுங்கள்.
தொழிலிலும் நண்பர்கள் மூலம் வாய்ப்பை பெறலாம் என்று நினைக்காமல் ,
நீங்களே களமிறங்குங்கள். அப்போது தான் வெற்றி நிலைக்கும்.
நண்பர்களுக்காக காதலையும் காதலுக்காக நண்பர்களையும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
இரண்டுமே நிலைக்குமா என்று தெரியாது.
ஒரு பெண்ணின் காதலை உடனே நம்பி விடாதீர்கள்.
அந்த காதலியின் பேச்சைக் கேட்டு உங்களிடம் காதலின்றி பழகும் தோழிகளை புறக்கணிக்காதீர்கள்.
தாய் , தந்தையர் ஆனாலும் அவர்கள் சொல்லும் அனைத்தும் கேட்காதீர்கள்.
அவர்களின் பார்வை வேறு , உங்களின் பார்வை வேறு. அவர்கள் உங்களின் பாதுகாப்பு முக்கியம் என்று நினைத்து வாழ்வாதாரத்தை சில நேரம் அழித்து விடுவார்கள்.
நான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன்.
எனக்கு சரிவர வேலை கிடைத்ததில்லை.
நான் பெரிய பிரச்சினைகளை எல்லாம் மற்றவர்களுக்கு சரிசெய்து கொடுத்துள்ளேன் .
எனக்கு பிரச்சினை என்றால் யாரையும் கூப்பிட்டது இல்லை.
தனியாக சமாளித்தால் தான் வாழ முடியும்.
ஒரே விஷயம் தான் நீங்கள் யாரையும் நம்பாதீர்கள்.
ஆனால், உங்கள் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையை கெடுக்காதீர்கள்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே.

என்னம்மா இப்படி பண்றிங்களேமா?

 1. இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு...

2. தோசை கல்லு உள்ளே இருந்தால்உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..
3. வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..
4. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..
5. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
6. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..
7. ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..
8. இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
9. பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ... # டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம
10. ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம
11. இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம
12. ATM - Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்)
13. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..
14. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!
15. காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..
16. ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதி
17. பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான் போகனுமா? என்னம்மா இப்படி பண்றிங்களேமா
18. தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4
19. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு... # அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்னு உத்தரவு போட்ருங்கயா....
20. உங்களுக்கு துன்பம் வருகையில் ..உங்கள் சொந்தங்களும் ..நண்பர்களும் ..உங்களுக்கு. பின் நிற்பார்கள் .....

பெண் உதவியாளர் வீட்டைவங்கியாக மாற்றிய அமைச்சர்.

 ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, 69, தன் உதவியாளரின் வீட்டை, பணத்தை சேமித்து வைக்கும் வங்கியாக பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, சமீபத்தில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது பெண் உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி, 30, வீட்டில், 21 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பார்த்தா சட்டர்ஜி ஏற்கனவே கல்வி அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், அப்போது பெற்ற லஞ்சப் பணத்தை, உதவியாளர் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், அர்பிதா முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:என் வீட்டுக்கு வாரத்துக்கு ஒரு முறை அமைச்சர் வருவார். என் வீட்டை வங்கியைப் போல் அவர் பயன்படுத்தினார். வீட்டின் ஒரு அறை முழுதும், பணத்தை பதுக்கி வைத்திருந்தார். அதில், எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவல் எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பெண் உதவியாளர் வீட்டைவங்கியாக மாற்றிய அமைச்சர்

Wednesday, July 27, 2022

பொன்னையனுக்குஇதெல்லாம் சகஜமே!

  தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன், அ.தி.மு.க., தலைவர்களை விமர்சித்து, நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பேசிய, ஆடியோ உரையாடல் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோவில் இடம் பெற்றுள்ள குரல், தன்னுடையது இல்லை என, பொன்னையன் மறுத்தாலும், நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவதிலும், தன் நிலைப்பாட்டை மாற்றுவதிலும், அவர் வல்லவர்.

கடந்த ௧௯௮௬ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரின் இல்ல திருமணத்தை எம்.ஜி.ஆர்., நடத்தி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சராக இருந்த பொன்னையன், 'கழகத்திற்குள் ஒரு கருநாகம் புகுந்து விட்டது; அது, உங்கள் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 'அந்த பாம்பை உங்கள் பூட்ஸ் காலால் மிதிக்க வேண்டும்' என, ஜெயலலிதாவை கடுமையாக சாடி பேசினார். இதனால், எம்.ஜி.ஆர்., தர்மசங்கடத்திற்கு ஆளானார். ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த பொன்னையன் ஒரு பேப்பரை காண்பித்து, 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்பதற்கு, இதைவிட பெரிய சான்று இருக்க முடியுமா?' என்றார்.
பிரபல சீட்டு கம்பெனி ஒன்றில், ஜெயலலிதா லட்சம் ரூபாய் டிபாசிட் செய்திருந்தார். அந்த படிவத்தில், நாமினியாக சசிகலாவின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதன் நகலை காட்டி, சசிகலாவை வாரிசு என்று பொன்னையன் சொன்னதை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதே பொன்னையன், 'அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் என்று சொல்லவோ அல்லது கட்சிக் கொடியை பயன்படுத்தவோ சசிகலாவுக்கு எந்த அருகதையும் இல்லை' என்று பின்னர் விமர்சித்தார். இப்படி நேரத்திற்கு ஏற்றபடி மாறி மாறி பேசுவது, அவரின் அரசியல் வாழ்க்கையில் சகஜமான ஒன்று தான்.
ஆடியோவில் பேசும் குரல் தன்னுடையது இல்லை எனில், பொன்னையன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத் தானே செய்யும்.

பரந்துாரில் அமைகிறது 2வது விமான நிலையம்!

 சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் பகுதியை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


சென்னையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மதுராந்தகம்; காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே பரந்துார் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னுார் ஆகிய, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், பன்னுார் மற்றும் பரந்துார் இறுதியாக பரிசீலிக்கப்பட்டன. பன்னுாரில், 4,500 ஏக்கர் நிலமும், பரந்துாரில் 4,791 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து, டில்லியில் நேற்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.


latest tamil news



இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் பகுதியில், இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது என, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், இரண்டு விமான ஓடுபாதைகளுடன் கூடிய, பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு அதிக அளவிலான கட்டடங்கள் இல்லை. மேலும், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் உள்ளது. விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் வான்வெளியில் தடையில்லாத வகையில், இந்த பகுதி அமைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கறுத்துப் போன கோல்ட் கவரிங் நகைகளை 10 பைசா செலவில்லாமல் எப்படி புதிதாக வாங்கிய தங்க நகை போல பளிச்சிட வைக்கலாம் தெரியுமா?

 நம்மிடம் இருக்கும் எல்லா நகைகளும் தங்கமாக இருப்பது இல்லை. ஒரு சில நகைகள் கோல்டு கவரிங்கில் கண்டிப்பாக வைத்திருப்போம். அது மட்டுமில்லாமல் எல்லோராலும் தங்க நகையை வாங்கி விடவும் முடியாது. அவர்கள் கோல்ட் கவரிங் நகைகளை நீண்ட நாட்கள் பத்திரப்படுத்த வேண்டும். தங்கத்தைப் போலவே மின்ன செய்யக்கூடிய கோல்ட் கவரிங் நகைகள் அடிக்கடி கறுத்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படி கறுத்து போன கோல்ட் கவரிங் நகைகளை 10 பைசா கூட செலவு செய்யாமல் எப்படி வீட்டிலேயே புத்தம் புதிய நகை போல பளிச்சிட வைக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். உமா கோல்ட் அல்லது கோல்ட் கவரிங் என்று அழைக்கப்படும் இந்த கவரிங் நகைகளில் சிறிதளவு தங்கம் சேர்ப்பது உண்டு. இதனால் நீண்ட நாட்களுக்கு தங்கம் போலவே பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகு கோல்ட் கவரிங் நகைகள் உப்பு காற்று அதிகம் பட்டால் மிக விரைவாக கறுத்து விடும். கவரிங் நகையாக இருந்தாலும், தங்க நகையாக இருந்தாலும் கறுத்து போனால் இப்படி நீங்கள் செய்து பாருங்கள். மீண்டும் புதிய நகை போல மாறிவிடும். இதற்காக வெளியில் காசு கொடுத்து பாலிஷ் போட வேண்டிய அவசியம் இல்லை. முதலில் ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் இருக்கும் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் கறுத்து போன நகையை அந்த எலுமிச்சை சாற்றில் 15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். எல்லா இடங்களிலும் எலுமிச்சை சாறு படும்படி ஸ்பூன் அல்லது கரண்டியை பயன்படுத்தி திருப்பி விடுங்கள். 15 நிமிடம் நன்கு ஊறிய பிறகு நகைகளில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் அனைத்தும் எலுமிச்சை சாற்றில் இறங்கிவிடும். அதன் பிறகு நகையை எடுத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை சாறை வடிகட்டி சேருங்கள். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பை பற்ற வைத்து லேசாக சூடேற்றங்கள். ரொம்பவும் கொதித்து விடக்கூடாது. மிதமான சூட்டில் அடுப்பை அணைத்து விடுங்கள். எலுமிச்சை சாறு கலந்த இந்த தண்ணீரில் கறுத்துப் போன நகைகளை போட்டு சூடேற்றம் செய்யும் பொழுது மீதம் இருக்கும் அழுக்குகளும் முழுமையாக நீங்கிவிடும்.  அதன் பிறகு நகையை மட்டும் தனியாக எடுத்து நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பழைய டூத் பிரஷ் மற்றும் ஏதாவது ஒரு பிராண்ட் பேஸ்ட் பயன்படுத்தி நகை முழுவதையும் நன்கு அழுத்தம் கொடுத்து தேயுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை தொட்டுக் கொண்டு நன்கு நுரை வர தேய்த்து கொடுங்கள். இப்பொழுது 99 சதவீதம் எல்லா அழுக்குகளும் நீங்கி நல்ல பளிச்சன உங்களுடைய நகை புத்தம் புதியதாக மின்னும். இதன் பிறகு சிறிதளவு மஞ்சள் பொடியை அந்த நகை முழுவதும் தேய்த்துக் கொடுங்கள். பிறகு ஐந்து நிமிடம் கழித்து நகையை சாதாரண தண்ணீரால் நன்கு அலசி சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்தி நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் இருக்கக்கூடாது இதற்காக முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர் அல்லது பேபி பவுடர் போட்டு பேன் காற்றில் ஆறவிட்டு துடைத்து விடுங்கள். அவ்வளவுதான் தங்க நகையாக இருந்தாலும் சரி, இது போல தங்கம் கலக்கப்பட்ட கோல்ட் கவரிங் நகையாக இருந்தாலும் சரி, ரொம்பவே பளிச்சுன்னு புத்தம் புதியதாக மின்னும்.

கட்சி பணத்தை செலவிடுங்களேன்!

 டெல்டா மாவட்டங்களில், அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை, மழையில் நனையாமல் பாதுகாக்க வசதியில்லை. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்த பின், வழக்கமாக இயங்கிய பல பஸ்களை நிறுத்தி விட்டனர்.


இதனால், போதிய பஸ் வசதி இல்லாமல், பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால், மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தும், அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க நிதியில்லை. தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்து உள்ளது. காவிரி ஆற்றில் அதிகமாக வரும் தண்ணீரை சேமிக்க அணை இல்லை; பல டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இப்படி தமிழகத்தில் செய்ய வேண்டிய அவசர, அவசிய பணிகள் ஏராளமாக உள்ளன.


latest tamil news


இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவிடத்தில், 137 அடி உயர பேனா வடிவமைப்பு, 81 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட உள்ளதாக, செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கனவே, 39 கோடி ரூபாய் செலவில், கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், பேனா வடிவமைப்புக்காக, மீண்டும், 81 கோடி ரூபாய் செலவிடுவது சரியா?

'நிதி இல்லை... நிதி இல்லை...' எனக்கூறி, முந்தைய அரசு அறிவித்த பல திட்டங்களை நிறுத்தி பஞ்சப்பாட்டு பாடுவதுடன், சொத்து வரியை உயர்த்தியதுடன், மின் கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்துள்ளது 'திராவிட மாடல்' அரசு.

மற்ற பல திட்டங்களுக்கு நிதியில்லை என புலம்பும் தி.மு.க., அரசு, நினைவிடத்தில் பேனா வடிவமைப்புக்காக, 81 கோடி ரூபாய் செலவிடுவது எந்த விதத்தில் நியாயமாகும். தன் தந்தை கருணாநிதியின் புகழை பரப்ப விரும்பும் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், இந்த பேனா வடிவமைப்பை தன் கட்சி பணத்தில் செய்யலாமே... மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும்! 'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்ற பழமொழி உண்டு. அந்த பழமொழி ஸ்டாலினுக்குத் தான் பொருந்தும்.
DMK, MK Stalin, Pen Statue

நம்புங்கள் .

 குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...

நாய், பூனை, எலி, மாடு, போன்ற விலங்கினங்கள் போன்று இறந்த கிடக்கும் குரங்கை பார்த்ததுண்டா?
டிஸ்கவரி சேனலிலாவது பார்த்ததுண்டா?
இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் இறப்பு நாள் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக்குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம். இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பதுதான் பேரதிசயம்…
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா…!!
இறக்கும் தருவாயில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் இறக்கும் தருவாயில் கரையாண் புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து அதன் உடல் மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்.
ஆஞ்சநேயர் இராமரிடம் கேட்டு பெற்ற வரங்களில் ஒன்று இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லையின்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பதாகும்.
May be an image of text

Tuesday, July 26, 2022

ஆடி அமாவாசை 28_07_2022.

 ஆடி அமாவாசை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.
விரதம் சரி... அது என்ன கதை? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, "உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்" என்று கூறியது. அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, "உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்' என்ற குரல் கேட்டது.
இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்து போன இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும் வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்து விட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்... அரற்றினாள்... தவித்தாள்... தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்து கிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், "இருண்டு போன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, "ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும்' என சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னி தேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. "அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்' என ஆசியளித்தாள் சீதாதேவி.
இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.
இராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோவிலுக்குள் உள்ளன. "ராமேஸ்வரம் சென்றும் குளிக்காததுபோல' என்றொரு சொல்வழக்கு உண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனித நீராடுவது அவசியமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இங்கு ஆடி மாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாகவும் இது விளங்குகிறது.
தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.
அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு சம்பவத்தைக் காண்போமா.. குருக்ஷேத்ர யுத்தத்திற்குமுன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். "போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்கவேண்டும்?' எனக் கேட்டான்.
துரியோதனன் தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், "பூரண அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி" என்றான். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு வந்தனர். "நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள் தானே அமாவாசை! ஆனால் நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா?' என்றனர்.
அதற்கு கிருஷ்ணன், "இப்போது நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே இன்று தான் அமாவாசை..." என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.
ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல; தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.
ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்று வரலாம்.
அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா" என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.
சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை" என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.
அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன் முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒரு சமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்" என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்" என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம் புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.
முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.
ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை.
(சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை).
ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது.
எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம்.
ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன்,
மேற்கண்ட ஊர்களுக்கு அருகில் இல்லாதவர்கள், அவரவர் ஊர் களுக்கு அருகில் இருக்கும் ஆறுகள் (நீரோடும் இடங்களில்) பித்ரு பூஜை செய்து முன்னோர்களின் ஆசியை பெறலாம்.
இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம்.
அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும்.
அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும்.
இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.
இந்த வருடம் ஆடி அமாவாசை 28/7/2022 வியாழக்கிழமை வருகின்றது . அன்று உங்கள் பித்ருக்களுக்கு பூஜைகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியை பெறுவீர்களாக.
அற்புதங்கள் நடந்த ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய பிதுர் பூஜை மட்டுமின்றி, இறைவழிபாட்டிலும் ஈடுபட்டு தங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்தால் என்றும் வாழ்வில் வசந்தம் காணலாம்.
"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
May be an image of text that says 'जय श्री महाकाल'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...