Friday, July 22, 2022

குற்றவாளிகளை ஆதரித்த காவல்துறை! கொதித்து எழுந்த மக்கள்!

 கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது.

அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை.
மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் சரி, கொலை செய்யப்பட்டு இருந்தாலும் சரி இதற்கு நிர்வாகம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். விசாரிக்காமலே சென்னையில் இருந்து கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிர்வாகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை எப்படி புரிந்து கொள்வது. ”பள்ளி நிர்வாகம் மீது எந்தத் தவறும் இல்லை” என அவரது கருத்து மீடியாக்களில் பரவிய போது தான் மக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்றனர்.
பள்ளி மீது தவறில்லை
தனியார் பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்த்தது தான் தவறு
நீதிமன்றங்களுக்கு செல்லாமலே
தீர்ப்பு வழங்கியது எப்படி?
அதெப்படி இபிஎஸ் சேலத்தில் இருந்து வந்தவுடன் அமைதியாக நடந்து கொண்டு இருந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை பார்த்தால் இதற்கு காரணமே இபிஎஸ் தானோ என்று தோன்றுகிறது. இதற்காக தன் கூட்டாளிகளான அண்ணாமலை மற்றும் அன்புமணியையும் சேர்த்து கொண்டது போல தெரிகிறது.
தினத்தந்தி வெளியிட்ட செய்தி மாபெரும் பொய் . அந்த மாதிரி டிஜிபி கூறவே இல்லை. பொய் செய்தியை பரப்பிததற்காக தினத்தந்தி மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கைதை இரண்டு நாள் முன்னரே செய்திருந்தால். போராட்டமே நடந்திருக்காது. வன்முறையும் நிகழ்த்திருக்காது.
May be an image of 3 people, people standing and text that says "M nternations. Sopoor பள்ளி மீது எந்த தவறும் இல்லை -டிஜிபி சைலேந்திரபாபு"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...