Thursday, July 21, 2022

இவர்கள் திட்டமிட்டு உழைப்பவனை கேவலபடுத்துர கூட்டம்.

 ஒரு சிட்டுக்குருவி தன் முட்டையை எடுத்துச் செல்லும் வழியில் கடலைக் கடக்க நேரிட்டது

அப்போது வாயில் இருந்து இடறி அதன் முட்டை கடலுக்குள் விழுந்துவிட்டது
உடனே தன் முட்டையை எப்படி மீட்பது என்று எண்ணியபோது.....
எப்படியாவது தன் முட்டையை மீட்டு
தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது அந்த சிட்டுக்குருவிக்கு
உடனே தன் சிறகால் நனைத்து கடல் நீரை அப்புற படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு
வெகு விரைவாக தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தது
அப்போது அந்த வழியில் நாரதர் பயணித்தார்
சிட்டுக்குருவியின் செயலைக் கண்டு மிகவும் ஆச்சிரியம் அடைந்த அவர்
என்ன காரணம் என்று சிட்டுக்குருவியிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி....
அதன் அருகில் சென்று என்ன காரியம் செய்கிறாய்.....??? என்று வினவினார்
அதற்கு சிட்டுக்குருவி தன் முட்டை கடலில் விழுந்துவிட்டதாகவும்
அதை காப்பாற்ற கடலை நீரை அப்புற படுத்துவதாகவும் கூறிவிட்டு
தன் செயலில் முகாமியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது
இதனைக் கேட்ட நாரதர்
உனக்கென்ன பைத்தியாமா.......???
நீயோ மிகச்சிறிய சிட்டுக்குருவி
கடலோ மிகவும் பெரியது
நீ கடலின் தன்மை தெரியாமல் வெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கூறினார்
கடலை நீரை சிட்டுக்குருவியின் சிறகால் அப்புறப் படுத்த முடியுமா......???
மேலும் இதற்கு உன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டால் கூட போதாது,
இது வீண் வேலை என்று கிண்டலும் கேளிக்கையுமாக கூறினார்
ஆனால், சிட்டுக்குருவியோ...
நாரதர் உரைத்ததை கண்டுகொள்ளாமல்
தன் முழு கவனத்தையும் கடல் நீரை அப்புற படுத்தும் வேளையிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தது
நாரதருக்கு கோவம் மேலோங்க
குருவியிடம் தன் அறிவை பயன்படுத்தி விளக்கம் கொடுக்கிறார்
அதைக் கேட்ட குருவி........
"என் குழந்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இப்போது என்னுடையது
வாழ்நாள் முழுவதும் போராடிப் பார்ப்பேன்
என் குழந்தையை காப்பாற்றுவதில் வெற்றி அடைவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது
ஆனால்,
என் மூச்சு இருக்கும் வரை தொடர்ந்து முயற்சிப்பேன்" என்று உறுதிபட கூறியது
சிட்டுக்குருவியின் உறுதியான பதிலைக் கேட்ட நாரதர்
எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறார்
சிட்டுக்குருவி தன் கடமையில் மட்டும் சோர்வடையாமல்
தொடர்ந்து தம் பணியை முழு ஈடுபாட்டோடும் அற்பணிப்போடும் செய்து கொண்டிருந்தது
கிருஷ்ணனைக் காண சென்ற நாரதர்
சிட்டுக்குருவியின் கதையை கூற
அங்கே கருடன் உறங்கிக் கொண்டிருபதைக் கண்டு கருடனிடம்...
உன் இனத்தை சேர்ந்த சிட்டுக்குருவி
அங்கு தன் குழந்தையை காப்பாற்றும் வேலையில் போராடிக் கொண்டிருக்கிறது
நீயோ இப்படி உறக்கம் கொண்டிருக்கிறாய் என்றார்
இதனைக் கேட்ட கருடன்
அப்படியா சங்கதி.....!!!
என்று உடனே கடலை நோக்கி பறந்தது
இதனை பார்த்த நாரதருக்கு இன்னும் கோவம் அதிகமாகியது
நாரதர், கிருஷ்ணனிடம்
"நீங்கள் எடுத்து சொல்லக் கூடாதா......???
பாவம் அந்தக் குருவி எப்படியும் தன் முயற்சியில் வெற்றி பெறப் போவதில்லை
எதற்கு இந்த வீண் முயற்சி செய்கிறாய்......???
இப்போது துணைக்கு கருடன் வேறு சென்றுவிட்டது
"அடுத்த வேலையை கவனி என்று ஆறுதல் சொல்லாம் தானே......"
என்று கிருஷணனிடம் முறையிடுகிறார் நாரதர்
இதைக் கேட்ட கிருஷ்ண பராமாத்மா.....
சற்று பொறுந்திருந்து பாரும் நாரதா......
என்று கள்ளச் சிரிப்பு சிரித்துக்கொண்டே
இருவரும் என்ன நடக்கிறது என்று நோட்டமிடுகிறார்கள்
அங்கு சென்ற கருடன்
தன்னுடைய பெரிய இரு சிறகைக் கொண்டு
இரு பக்கமும் கடல் நீரை அப்புறப் படுத்தியது
கடலின் ஆழத்தில் இருந்த முட்டை சிட்டுக்குருவியின் கண்ணில் பட
உடனே வாயில் கவ்விக்கொண்டு
கருடனுக்கு நன்றி கூறி சிறகடித்து பறந்து தன் வேலையை செய்ய கிளம்பிவிட்டது
கருடனும் கிருஷ்ணனை நோக்கி பறந்து சென்றது
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில்.....
சிட்டுக்குருவி தன் முட்டை தவறிய போது தடுமாறாமல்
தன் கடமையை செய்தது
கருடன் தன் கடமையை செய்தது
நன்றி நவில்தளோடு கதை முற்றுப் பெற்றது
கருடனுக்காக எந்த பாராட்டு விழாவும் நடத்தவில்லை
ஆனால்
இதே மனிதன் செய்திருந்தால்
பெரிய விழாவாக எடுத்து
அதை பாராட்டு விழாவாக நடத்தி கொண்டாடி இருப்பார்கள்
தன்னால் தான் சிட்டுக்குருவியின் இனம் இன்னுமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பறைசாற்றிக் கொள்வார்கள்
அதனதன் கடமையைச் செய்வதற்கு எந்த பாகுபாடும்
ஏதொரு நிபந்தனையும் இல்லை என்று பறவை இனங்களுக்கு தெரிந்த அளவு கூட
மனிதர்களுக்கு தெரியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை
பிரச்சினை வந்தால் சோர்ந்து போவதும்
அதையே நினைத்து கவலை மட்டும் பட்டு
காரியத்தில் கவனம் இல்லாமல் இருப்பதும் தான்
மனிதனின் அவல நிலை
சிட்டுக்குருவிக்கு இருக்கும் சிறு முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும்
வாழ்க்கை வசப்பட்டுவிடும்
“சிந்தனை செய்து தெளிவு பெறுவோம்” 🐦
your mouse to view the photo in 3D

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...