Monday, July 18, 2022

போலி முகத்திரையை கிழியுங்க!

  'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவது மட்டுமின்றி, மாணவர்கள் அனைவரும், அதை எதிர்த்து போராட வேண்டும்' என்றும், தி.மு.க., அமைச்சர்கள் சிலர் உசுப்பேற்றி வருகின்றனர். தி.மு.க., அமைச்சர்களிடமும், வைகோ, திருமாவளவன், சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும், நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... எங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், எந்த மொழி படிக்க வேண்டும் என முடிவெடுப்பதற்கு, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளும், பேரன், பேத்திகளும், தமிழ் வழி பள்ளியிலா படிக்கின்றனர்? ஏற்கனவே தமிழகத்திற்கு வரவிருந்த நவோதயா பள்ளியை வர விடாமல் செய்து விட்டீர்கள்; தற்போது புதிய கல்விக் கொள்கையையும் தடுக்கிறீர்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தாய் மொழியான தமிழும் வேண்டும்; தேசிய மொழியான ஹிந்தியும் வேண்டும்; பன்னாட்டு மொழிகளான ஆங்கிலமும், பிரெஞ்சும் வேண்டும்.

தமிழர்கள் ஹிந்தி படிக்க ஆரம்பித்தால், தமிழ் அழிந்து விடும் என்று பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள் தி.மு.க., கூட்டணி தலைவர்களே... தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் தான், தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ பொதுத் தேர்வில், தமிழ் மொழி பாடத்தில் வரலாறு காணாத அளவிற்கு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். நீங்கள் தமிழைக் காப்பாற்றும் இந்த லட்சணத்தைப் பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது. தமிழன் பல மொழிகளை கற்று வெளிநாடுகளுக்கு போய்விட்டால், நமக்கு கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் ஆள் கிடைக்க மாட்டார்கள் என்று எண்ணி, திராவிடச் செம்மல்கள் பயப்
படுகின்றனர். தமிழர்களை அடிமுட்டாளாகவே வைத்துஇருக்க நினைக்கின்றனர்; அதெல்லாம் இனி நடக்கவே நடக்காது. தி.மு.க., - ம.தி.மு.க., - வி.சி., நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டுகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் எனில், ஒரே ஒரு வழி தான் உள்ளது... இந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் வாரிசுகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர், எந்த நாட்டில் படிக்கின்றனர் என்பதை ஆதாரத்தோடு வெளியிட்டு, அவர்களின் போலி முகத்திரையை பா.ஜ., தலைவர்கள் கிழிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...