Wednesday, July 20, 2022

இந்த நுாற்றாண்டே இந்தியாவுக்கானது!

 சமீபத்தில் பிரதமர் மோடி, '21ம் நுாற்றாண்டு இந்தியாவுக்கானது' என, அதீத நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார். அதே நேரத்தில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பின்னலாடை தொழிலதிபர் ஒருவர் அளித்த பேட்டியில், 'எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோரில், ௫௦ சதவீதத்தினர் வட மாநிலத்தவரே.'தமிழக இளைஞர்களிடம் உழைக்கும் மனோபாவம் குறைந்து, மதுபானம், சினிமா மற்றும் அலைபேசி மீதான மோகம் கூடியுள்ளது. எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும்; வேலை எதுவும் செய்யக் கூடாது' என்ற எண்ணம், அவர்களிடையே அதிகரித்துள்ளது' என்று

தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலவசங்களும், மதுக் கடைகளும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல உள்ளன. மதுக் கடைகள் வாயிலாக நம் குடியைக் கெடுத்து, அதன் வருமானத்தைக் கொண்டு இலவசங்களை அள்ளி இறைக்கிறது மாநில அரசு.இதனால், உடல்நலக் குறைவும், உழைக்கும் எண்ணமும் இல்லாத இளைய சமுதாயம் உருவாகி வருகிறது. மதுக் கடைகளை மூடி விட்டால், அதில் கொண்டு போய் கொட்டப்படும் வருவாய், குடும்பங்களுக்கு சென்று, அரசு வழங்கும் இலவசங்களை விட அதிகமாக பொருட்களை, மக்களே காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு, அவர்களின் பொருளாதார நிலைமை மேம்படும்.
எனவே, மதுக் கடைகளை அரசு படிப்படியாக மூட முற்படுவது, வளமான இளைய தமிழகம் உருவாக வழி வகுக்கும். ஆதலால், தமிழக இளைஞர்களே... மதுபானங்கள் உட்பட அனைத்து போதைகளுக்கும், முற்றிலும், 'நோ' சொல்லுங்கள். மொபைல் போன், சினிமா, கிரிக்கெட் என, அனைத்து பொழுதுபோக்குகளையும் அளவாக வையுங்கள். படிப்பையும், உழைப்பையும் பிரதானமாக கருதுங்கள். உடல் உழைப்பை கேவலமாக நினைக்க வேண்டாம்.
மகாகவி பாரதி சொன்னது போல, 'தொழில் சோம்பலை போன்ற இழிவில்லை' என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்தால், இந்த நுாற்றாண்டே இந்தியாவுக்கானது தான்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...