தப்பை சரியாக செய்பவர்கள் இருக்கும் வரை, பொய்களை உண்மையாக்குபவர்கள்இருக்கும் வரை, நம்பியவர்களை ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை, தீர்ப்பு வழங்கம் எவரும் இங்கு உத்தமர்கள் இல்லை.
உங்களை எதிர்க்கும் உறவுகளிடம் ஏங்கி நிற்பதை விட உங்களையே எதிர்பார்க்கும் உறவை ஏற்றுக் கொள்ளலாம்.
எத்தனையோ கஷ்டங்கள் நஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் அசிங்கங்கள் அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொண்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக்கொண்டு இ௫க்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறேதுமில்லை.எதிர் பார்க்கும் வாழ்வு யா௫க்கும் அமைவதில்லை எதிர்கொள்ளும் வாழ்வே அமைகிறது நீங்கள் வலிமையாக இ௫க்க வேண்டும் என்றால் துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
தனியாக நடக்கத் தயாராக இருங்கள். உங்களுடன் தொடங்கும் பலர் நீங்கள் முடிக்கும்போது, உங்களுடன் இருக்க மாட்டார்கள்.
தேடலை குறைத்துக் கொள்ளுங்கள் நிம்மதி அடைவீர்கள். அதிக பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் தேடப்படுவீர்கள்.
எதிர்பார்ப்பை தொலைத்துக் கொள்ளுங்கள் சந்தோஷம் அடைவீர்கள்.
வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது கற்றுக்கொள்ளுங்கள்.
சிரமமான காலகட்டத்திலும் உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உங்களால் எடுத்து வைக்க முடிந்தால், எவராலும் உங்களை தோற்கடிக்க முடியாது.
No comments:
Post a Comment