Friday, July 22, 2022

அன்பு....

 அன்பு யாரைக் குறித்து வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வேறுவேறு பெயர்கள் உண்டு.

சமவயதினரிடம் வைக்கும் அன்புக்கு "சிநேகிதம்'.
பெரியவர்களிடம் வைக்கிற அன்பு "மரியாதை'
குழந்தையிடம் வைக்கும் அன்பு "வாத்ஸல்யம்'.
நாயகன், நாயகி இருவரும் அன்பு கொள்வது "சிருங்காரம்'
நம் மாதிரி சாதாரணப்பட்டவர்கள் நம்மைவிட கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கிற அன்புக்குப் "பரிவு' என்று பெயர்.
நம்மைவிட மகாபெரியவர்கள் நம்மிடம் வைக்கும்போது "அருள்', "கிருபை' என்றெல்லாம் பேர் எடுக்கிறது.
வெறுமனே பரிவாக, ஒரு ஆறுதல் தருவதாக மட்டுமின்றி, கஷ்டநிலையைப் போக்கடிக்கும் சக்தி மகான்களின் அருளுக்கு இருக்கிறது.
ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பே மேலானது. இந்த பரமகருணைக்கு "அநுக்ரஹம்' என்று பேர் சொல்கிறோம்.
அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உசந்த அன்பு தான் பக்தி ஆகும்.
#காஞ்சிப் பெரியவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...