Wednesday, July 27, 2022

பொன்னையனுக்குஇதெல்லாம் சகஜமே!

  தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன், அ.தி.மு.க., தலைவர்களை விமர்சித்து, நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பேசிய, ஆடியோ உரையாடல் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோவில் இடம் பெற்றுள்ள குரல், தன்னுடையது இல்லை என, பொன்னையன் மறுத்தாலும், நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவதிலும், தன் நிலைப்பாட்டை மாற்றுவதிலும், அவர் வல்லவர்.

கடந்த ௧௯௮௬ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரின் இல்ல திருமணத்தை எம்.ஜி.ஆர்., நடத்தி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சராக இருந்த பொன்னையன், 'கழகத்திற்குள் ஒரு கருநாகம் புகுந்து விட்டது; அது, உங்கள் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 'அந்த பாம்பை உங்கள் பூட்ஸ் காலால் மிதிக்க வேண்டும்' என, ஜெயலலிதாவை கடுமையாக சாடி பேசினார். இதனால், எம்.ஜி.ஆர்., தர்மசங்கடத்திற்கு ஆளானார். ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த பொன்னையன் ஒரு பேப்பரை காண்பித்து, 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்பதற்கு, இதைவிட பெரிய சான்று இருக்க முடியுமா?' என்றார்.
பிரபல சீட்டு கம்பெனி ஒன்றில், ஜெயலலிதா லட்சம் ரூபாய் டிபாசிட் செய்திருந்தார். அந்த படிவத்தில், நாமினியாக சசிகலாவின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதன் நகலை காட்டி, சசிகலாவை வாரிசு என்று பொன்னையன் சொன்னதை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதே பொன்னையன், 'அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் என்று சொல்லவோ அல்லது கட்சிக் கொடியை பயன்படுத்தவோ சசிகலாவுக்கு எந்த அருகதையும் இல்லை' என்று பின்னர் விமர்சித்தார். இப்படி நேரத்திற்கு ஏற்றபடி மாறி மாறி பேசுவது, அவரின் அரசியல் வாழ்க்கையில் சகஜமான ஒன்று தான்.
ஆடியோவில் பேசும் குரல் தன்னுடையது இல்லை எனில், பொன்னையன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத் தானே செய்யும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...