Wednesday, July 20, 2022

நாம் தான் பணம், கவுரவம், பதவி...என்று எதன் பின்னாலோ ஓடுவதால்.............

 நாடு பெண்பிள்ளைகளை பாதுகாக்க திராணியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது.கடந்தகாலத்தில் பெண்பிள்ளைகள் மிக மிக பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டார்கள். தாத்தா பாட்டி அம்மா அப்பா, சகோதரன் என்று பள்ளிக்கு பெண்பிள்ளைக்கு இந்த உறவுகளில் யாராவது ஒருவர் துணையாக வருவார்கள். காலத்தின் மாற்றங்கள் பெண்பிள்ளைகள் தனிச்சையாக பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலக்கட்டம் தொடங்கியது. அன்று பெண்பிள்ளைகளுக்கு ஆசிரியையும் ,ஆண்பிள்ளைகளுக்கு ஆசிரியரும் என்று அமைக்கப்பட்டார்கள். பள்ளிகூட கட்டுபாடுகளால் பெற்றோர்களை கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. காலஓட்டத்தில் நாலுவயது குழந்தைகூட செல்போனை உபயோகிக்கிறது. இன்று பெண்கள் பட்டதாரிகளாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாரதி சொன்ன வீட்டீனில் பெண்ணைப்பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று பாடினார்.தற்போதைய காலக்கட்டடத்தில் சில (அல்லது பல விந்தை)விந்தையான மனிதர்களால் இளய பெண்சமுதாயத்துக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்ப்பட்டதற்கு ஊடகங்கள், செல்போன்கள் மூலம் ஏற்படும்மறைவற்ற ரகசியங்கள் என இளையதலை முறைகள்சீ ரழிந்து போய் கொண்டிருக்கிறது.அந்தகாலக்கட்டத்தில் பெண்பிள்ளைகள் ஏஜ் அட்டன் ஆனாலே படிப்பை நிறுத்தி வீட்டோடு வைத்துவிடுவார்கள்.. பெற்றோர்களின் முறையான கண்டிப்பால் பெண்குழந்தைகள் பாதுகாப்புடன் இருந்தகாலம். அன்று சாராயக்கடைகள் ,மது அருந்துவோர்க்கெல்லாம் கடுமையான விதிமுறைகள் இருந்தகாலம். இன்றோ இருண்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. நடுத்தர வயதுள்ள பெண்களும் தலை முடியை விரித்தபடிதான் கோவிலுக்கே  வருகிறார்கள்.அவர்களை பார்த்து இளைய தலைமுறையினர் தங்கள் இஷ்டபடி ஆடைகள் அணிகிறார்கள்

பெண்களைப் பெற்ற அம்மாக்கள்
உடை விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தாலே அதை பார்த்து இளைய தலைமுறையினர் கண்ட ஆடைகளை பயன்படுத்த மாட்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...