Friday, July 22, 2022

'தி.மு.க.,வை சும்மா விட மாட்டேன்' : கொந்தளிக்கிறார் சுப்ரமணியசாமி.

 கடந்த 1958ல் ஈ.வெ.ரா., காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பதிவை, சமீபத்தில் 'டுவிட்டர்' பக்கத்தில், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் வெளியிட்டார். அந்த கூட்டத்தில் ஈ.வெ.ரா., 'பிராமணர்களை படுகொலை செய்ய வேண்டும்' என, பேசி இருந்தார்.சுமந்த் சி ராமன் பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக, தி.மு.க., செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான ராஜிவ் காந்தி, 'ஈ.வெ.ரா., குறிப்பிட்டது போல, அன்றைக்கே பிராமணர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தால், இன்றைக்கு சூத்திரர்களுக்கு இத்தனை சிக்கல்கள் வந்திருக்காது' என, கூறியுள்ளார் .


latest tamil news



இந்த பதிவை பார்த்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 'பிராமணர்களை படுகொலை செய்ய வேண்டும் என பதிவிடும் ராஜிவ் காந்தியையும், அவரது கட்சியான தி.மு.க.,வையும் சும்மா விட மாட்டேன்' என, கொந்தளித்தார்.மேலும், வன்முறையை துாண்டும் இயக்கமான தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்; கட்சியின் உதயசூரியன் சின்னத்தை முடக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார். அது தொடர்பான விசாரணை விரைவில் நடக்கும் என, தெரிகிறது.அத்துடன், 'தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க, அனுமதி வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 196ன்படி, ராஜிவ் காந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உரிய அனுமதி தேவை' என, கவர்னர் ரவிக்கு, சுப்ரமணியசாமி கடிதம் எழுதினார்.ஏற்கனவே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு மற்றும் அது தொடர்பான விபரங்களை, சுப்ரமணியசாமி மேற்கோள் காட்டி இருந்தார்.கவர்னர் ரவி, இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து, சுப்ரமணியசாமி கூறியதாவது:ராஜிவ் காந்தி, ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தி.மு.க.,   சுப்ரமணியசாமி

இப்பிரச்னை குறித்து, கவர்னர் ரவி, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார். விரைவில் அனுமதி வரும். உடனடியாக வழக்கு தொடுப்பேன்.பிராமணர்களை படுகொலை செய்ய வேண்டும் எனக் கூறும் யாரையும் விட மாட்டேன். தவறானவர்களை ஆதரிக்கும் தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்ட, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...