Friday, July 22, 2022

ஒற்றை தலைமை என்று சொன்னார்கள் ஆனால் ஏகப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் பொன்னையன் ஒரு உதாரணம்.

 அரசியலில் எவ்வளவு அம்பலப்பட்டாலும், தலைமைகள் வீழ்வதில்லையே…? பொன்னையன் ஆடியோ விவகாரத்தில் எடப்பாடியின் யோக்கியதை கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. எடப்பாடியின் தலைமை தொடர்வதை கேள்வியாக்கியுள்ளது. எனினும், அறவுணர்வு இல்லாத சமூகத்தில், இதெல்லாம் என்னவாகும்?

தற்போது வைரலாக பேசப்படுகிற பொன்னையன் ஆடியோ விவகாரத்திற்கு வருவோம். பணத்தால் தான் எடப்பாடி வெற்றிகளை குவிக்கிறார். வேலுமணியிடம் தான் அதிக எம்.எல்.ஏகள் உள்ளனர். சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தங்கமணி ஆகியோர் குறித்த அவரது மதிப்பீடுகள்.. இவற்றின் ஒட்டுமொத்த சாரம்சமாக கட்சித் தலைவர்கள் சிலர் திமுகவிடம் சமரச அரசியல் செய்வது, பணம், சொத்தை விருத்தி செய்வது, அத்துடன் எடப்பாடியின் வெற்றி என்பது ஸ்திரமற்றதாக மாற வாய்ப்புள்ளது என்பதே நமக்கு கிடைக்கும் புரிதல்.
இது எதுவுமே அதிர்ச்சிதரத்தக்க உண்மையல்ல. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒன்று சொல்ல வேண்டும் என்றால், கொட நாடு விவகாரத்தில் நியாயமான விசாரணை நடந்தால் கொலைக் குற்றத்திற்காக கம்பி எண்ண வேண்டியவர் தான் எடப்பாடி! நெடுஞ்சாலைத் துறை ஊழல்களை தோண்டினால், நிச்சயமாக சிறை கொட்டடிக்கு அனுப்பப்பட வேண்டியவர் தான்! கூட இருப்பவன் குழி தோண்டினால், குப்புற விழ வேண்டியவர் தான்! ஆக, எப்போது வேண்டுமானாலும் அவர் கதை முடிவுக்கு வரலாம். ஆனால், இவை எதுவுமே நடக்காமலும் போகலாம்.
யோக்கியமான தலைவருக்கு இங்கு இடமுள்ளதா?
May be an image of 2 people and text that says 'கடப்பாரையை தின்று செரிக்கும் அரசியல்'
பொன்னையன் செங்கோட்டையன் தம்பிதுரை இன்னும்
பலசீனியர்களுக்கு
எடப்பாடி தலைவர்
என்பதை ஜீரணிக்க முடியவில்லை.அவரும்3மணிகளும் Moneyயை வீசியெறிந்து சாதிக்கிறார்கள்.டெல்லிக்கு கப்பம் கட்டினால் அவர்கள்
ஓபிஎஸ்சை கைகழுவி விடுவார்கள் என்றுநினைக்கிறார்கள்.ஜனாதிபதி தேர்தல் வரை பாஜக அமைதியாக இருந்து
இவர்கள் விஷயத்தை
இழுத்து கொண்டிருக்கும்.அதற்கு பிறகு அதிரடியாக
இறங்கும்.எடப்பாடிக்கு
இனிவரும் காலம் சோதனைகள் நிறைந்ததுதான்.
ஸ்டாலின் ஏன் இவ்வளவு பம்முறார்னு தெரியல இல்லையென்றால் இந்த நபர் கொடநாடு கொலை கொள்ளை மட்டுமில்ல நெடுஞ்சாலையின் நெடுநாள் ஊழல்லேயும் உள்ள போகவேண்டிய ஆளு.
கொடநாடு விவகாரம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளியாகும் என்ற நம்பிக்கை போய்விட்டது!
நெடுஞ்சாலை துறை விசாரணையும் பெயரளுவுக்கே! உறுதியான நடவடிக்கை வழக்கு, குற்றச்சாட்டுகளை மெய்ப்பித்தல், தண்டனை என்ற நிலைகளுக்குப் போகாமல் பார்த்துக் கொள்வதாகவே தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...