Thursday, July 21, 2022

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை திமுக ஏன் எதிர்க்கவில்லை; நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கேள்வி.

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் திருப்பூர், ஈரோடு மாவட்ட தனியார் அரிசி ஆலை அரவை உரிமையாளர் களுடனான கலந்தாய்வு கூட்டம் காங்கேயம் அரிசி ஆலை சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், உணவுப்பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிப கழக செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
 அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை திமுக ஏன் எதிர்க்கவில்லை; நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கேள்வி
திருப்பூர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 221 அரிசி அரவை ஆலைகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் அரிசியை அரைத்து தருவது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில்கூறுகையில், கெள்முதல் செய்யப்படும் நெல் 16 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்கும், இவ்வாறு வரும் நெல்லை அரவை செய்யும்போது ஒரு வேகவைப்பு மூலம் கொடுக்க அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்தால் அரிசி உற்பத்தி அளவு குறைவு ஏற்படும். இதனால் அரசின் அரிசி ஆலைகளில் எந்த அளவு அரிசி உற்பத்தி வருகிறது என கூறினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.
மேலும் நெல் கொள்முதல் செய்யும் போதே ட்ரையர் அமைத்து கொள்முதல் செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும். மேலும் அரிசிக்கு ஜிஎஸ்டி போடப்பட்டதை திமுக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தமிழகம் முழுவதுமிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர். நெல் கொள்முதலில் தரத்தை கூட்டினால் மட்டுமே அரிசி உற்பத்தியில் அதிக அதிகம் கிடைக்கும், ஆனால் நீண்ட நாள் சேமிக்க ஒரு வேக வைப்பு போதாது, இரு வேகவைப்பு தேவை. மேலும் அரவை கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...