Wednesday, July 27, 2022

பரந்துாரில் அமைகிறது 2வது விமான நிலையம்!

 சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் பகுதியை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


சென்னையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மதுராந்தகம்; காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே பரந்துார் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னுார் ஆகிய, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், பன்னுார் மற்றும் பரந்துார் இறுதியாக பரிசீலிக்கப்பட்டன. பன்னுாரில், 4,500 ஏக்கர் நிலமும், பரந்துாரில் 4,791 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து, டில்லியில் நேற்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.


latest tamil news



இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் பகுதியில், இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது என, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், இரண்டு விமான ஓடுபாதைகளுடன் கூடிய, பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு அதிக அளவிலான கட்டடங்கள் இல்லை. மேலும், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் உள்ளது. விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் வான்வெளியில் தடையில்லாத வகையில், இந்த பகுதி அமைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...