Monday, July 18, 2022

தீனி திண்ணிகள் மட்டுமே படிக்கவும்.

 ===================================

இந்த புகாரி ஹோட்டல் இருக்கே..அதுல பன்பட்டர் ஜாம் ஒன்னு போடுவாங்க...அங்க ஆயிரம் நான் வெஜ் அயிட்டம் விப்பாங்க...ஆனா அந்த பன்பட்டர் ஜாம் சாப்பிடலைன்னா அவன் மனுசபயலே இல்லைம்பேன்... அவ்ளோ டேஸ்டா இருக்கும்.. அதே கடையில் நான்வெஜ் ப்ரியருக்காக மட்டன் சமோசா போடுவாங்க...கூடவே ஒரு க்ரீன் சட்னி சாப்பிட்டு பாருங்க...உசுர விட்ருவீங்க மக்காஸ்...
அதே மாதிரி நந்தினி ஸ்வீட்ஸ்ல பரோட்டா சாட்ன்னு ஒரு பேல்பூரி மாதிரி இருக்கும்.. ..ப்பா சான்ஸேயில்லை.. அதை சாப்பிடலைன்னா நம்ம ஜென்மம் சாபல்யமே அடையாது...
பெரிய நார்த் இன்டியன் சமோசா எல்லா கடையிலும் விக்கறாங்க..ஆனா பெரும்பாலானவங்க சாய்ஸ் அந்த சின்னதான ஆனியன் சமோசா தான்..அது இம்மாம் பெரிய சென்னை மாநகரில் இரண்டே இடத்தில் தான் நல்லாயிருக்கும்.. ஒன்று மவுண்ட் ரோட் கடையில் இன்னொன்னு நம்ம மைலாப்பூர் கபாலி கோவில் அடுத்த சந்தில்...சான்ஸே கிடையாது.. சமோசான்னா இவங்களை அடிச்சிக்கவே முடியாது.. அதே மாதிரி பூந்தமல்லி ஹைரோடுல அப்பாசாமி ஹாஸ்பிடல் பக்கத்துல துர்கா ஸ்வீட்ஸ்ல இந்த மினி சமோசா போடுவான்...ஆனா சுமாரா தான் இருக்கும்.. அப்புறம் அண்ணாநகர் ஶ்ரீவாரியில் சின்ன சமோசா கிடைக்கும் ..ஆனா காஸ்ட்லி டேஸ்டும் ரொம்பவே சுமார்...
பேல்பூரின்னா அது ஶ்ரீ மிட்டாய்ல தான் ..ரசமலாய்ன்னாலும் அதே ...ஶ்ரீ மிட்டாய். ஜிலேபி பிரியர்கள் ஶ்ரீமிட்டாய்ல ஒருவாட்டி சாப்பிட்டு பாருங்க...டெய்லி வாங்குவீங்க...மேலும் பனீர் போண்டா, பனீர் கட்லட் , ஸ்பிரிங் ரோல்...மினி பீஸா ரோல்னு எல்லாமே செம்மையா இருக்கும்...
வாழைக்காய் பஜ்ஜின்னா அது இன்னமும் நம்ம சரவண பவனை அடிச்சிக்க முடியாது. ஆனா மெதுபோண்டா மெதுபக்கோடா எல்லாம் சங்கீதாவில் தான் நல்லாயிருக்கும்...
பாதம் அல்வா சாப்டணும்னா ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் போங்க...அவங்க மைசூர்பாக் போலவே பாதம் அல்வாவும் ஏ ஒன் ரகம்...
ராஸ்பெர்ரி, க்ளோப் ஜாமூன் ரெண்டுமே கங்கா ஸ்வீட்ஸ்ல நல்லாயிருக்கும். அவங்க சீஸ்பால் கூட செம்மையா இருக்கும்...
அடையாரு ஆனந்தபவன்ல மெட்ராஸ் மிக்சரை அடிக்க ஆளில்லை..அதே போல தட்டை சீடை இரண்டும் செம்மையா இருக்கும்... ஈவினிங்ல போனா கொழுகட்டை , பேல்பூரி இரண்டுமே சூப்பரா இருக்கும்..
அண்ணாநகர் திருவடி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் செட்டிநாடு ஸ்நேக்ஸ் ப்ரபலம்...அவங்க ஓமபொடியை சென்னையில் யாருமே அடிச்சிக்க வாய்ப்பில்லை...அதே மாதிரி ரோஸ் கொக்கி என்கிற அச்சு முறுக்கு...செம்ம டேஸ்ட்...இவங்களும் கொழுகட்டை ப்ரட் ரோல் எல்லாம் போடுவாங்க...செம்மையா இருக்கும்..
ஶ்ரீவாரியில் எல்லா தீனியும் நல்லாவேயிருக்கும்...ஆனா காஸ்ட்லி... அவங்க சீப்பு சீடைக்கு பேர் போனவங்க..சாயந்திரம் போனா பஜ்ஜி கெடைக்கும் செம்ம டேஸ்ட்...
பெரம்பூர் ஶ்ரீனிவாச பவன்னு ஒரு கடை திருப்பதி லட்டை ஏறக்குறைய ஒத்திருக்கும் வகையில் செய்யும் ஒரே கடை...செம்ம டேஸ்ட்...இல்லை எங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வோணும்னா.. சனிக்கிழமை காத்தாலையே கிளம்பி தி.நகர் வந்துருங்க.. வெங்கடநாராயணா ரோடுல திருப்பதி தேவஸ்தான கோவில்ல வந்து திருப்பதி லட்டை வாங்கிக்கோங்க...அப்படியே எனக்கு ரெண்டு தந்துட்டு கூட போவலாம்..
இது மாதிரி நீங்களும் உங்களுக்கு சென்னையில் பிடித்த உணவு பண்டங்களை பகிர்ந்தால் பதிவருக்கு உபயோகமாக இருக்கும் என்பதை கூறிக்கொண்டு.....
May be an image of food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...