Thursday, July 21, 2022

ஸ்டாலின் புத்திமதி எம்.பி.,க்கு பொருந்தும்!

  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், ஆலாபுரத்தில் உள்ள ஏரியை புனரமைக்கும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்ற போது, அதில் பங்கேற்க வந்த, தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. 'அரசு விழாவில், ஹிந்து முறைப்படி பூஜைகள் எதுவும் நடத்தக்கூடாது; பூஜைகள் நடத்த விதி முறைகள் உள்ளனவா? பூமி பூஜைக்கு ஹிந்து மத பூஜாரிகளை அழைத்த நீங்கள், கிறிஸ்துவ பாதிரியாரையும், முஸ்லிம் இமாமையும் கடவுள் மறுப்பு சொல்லும் திராவிட கழகத்தினரையும் ஏன் அழைக்கவில்லை?' என்று கேள்விகள் கேட்டு, பொதுப்பணித் துறை அதிகாரிகளை சும்மா காய்ச்சி எடுத்ததுடன், பூமி பூஜையையும் தடுத்து நிறுத்தி, பெரும் புரட்சி செய்துள்ளார்.

'நாங்கள் ஆன்மிகத்துக்கு எதிரிகள் இல்லை: ஹிந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை; மற்றவர்களின் மத நம்பிக்கைகளில் நாங்கள் குறுக்கிடுவது இல்லை' என்று, சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தன்னிலை விளக்கம் அளித்தார்.இதெல்லாம், தர்மபுரி எம்.பி., செந்தில் குமாருக்குத் தெரிந்திருந்தும், பூமி பூஜையில் தேவையில்லாமல் தலையிட்டு, தன்னை பகுத்தறிவு செம்மலாக அடையாளம் காட்டி இருக்கிறார்.திராவிட செம்மல்கள் வீட்டில் நடக்கும் சீர்திருத்த திருமணங்கள், ராகு காலத்தில் நடப்பதில்லை. ஜோதிடர் குறித்துக் கொடுக்கும் சுபவேளையில் தான், சுயமரியாதை திருமணங்கள், தி.மு.க., தலைவர் தலைமையில் நடக்கின்றன.தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள், நல்ல நேரம் பார்த்துத் தான் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். ஸ்டாலின் பங்கேற்கும் பூமி பூஜையை, அந்தணர்கள் மட்டுமே நடத்தி வைப்பதை அவர் தடுத்தது இல்லை.மேட்டூர் அணையி லிருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியை கூட, ஹிந்து மத வழக்கப்படி, மலர் துாவித் தானே முதல்வரும், மற்ற அமைச்சர்களும் துவங்கி வைத்தனர்.
கிறிஸ்துவ பாதிரி யாரையோ, முஸ்லிம் இமாமையோ வரவழைத்து, அவரது வழிகாட்டுதல்படி, அரசு கட்டடத் திறப்பு விழாவை திராவிட செம்மல்கள் நடத்துவது இல்லையே? அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படுகிறது. பாதிரியார் வேதம் ஜெபிக்க, இமாம் குரான் ஓத, எந்த அரசியல் விழாவும் நடந்ததாக வரலாறு இல்லை.
இதெல்லாம் தெரியாமல், தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொண்டுள்ளார் செந்தில்குமார். 'அரைவேக்காடுகள் சொல்வதை, 'ஐ டோண்ட் கேர்' என்று ஒதுக்கிவிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் சொன்ன புத்திமதி, தர்மபுரி எம்.பி., செந்தில்குமாருக்குத் தான்,
கச்சிதமாக பொருந்தும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...