ஒருவரிடம் சென்று கடன் கேட்பது என்பதும் ஒரு வகையில் பிச்சை கேட்பது போன்று தான்! நம்மிடம் இல்லாத ஒரு நிலையை கூறி, மற்றவர்களிடம் கூனி குறுகி நின்று, எனக்கு கடன் கொடுக்குமாறு கேட்பதை கூட சிலர் இன்று கௌரவம் என்று எண்ணுகிறார்கள். உங்களிடம் இல்லாததை நீங்கள் இருக்கும் ஒருவரிடம் சென்று கேட்கிறீர்கள், எனவே இது கௌரவமாக நினைக்கும் விஷயம் அல்ல! கடன் இல்லாத நிலையை மட்டுமே மனிதன் விரும்புகிறான். இத்தகைய நிலையை அடைவதற்கு தினமும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இன்றைக்கு கடன் வாங்கினால் அதை திருப்பிக் கொடுக்க தானே போகிறோம் என்று நினைப்பது தவறு. உங்களிடம் இல்லாத ஒரு விஷயத்தை, இன்னொருவரிடம் சென்று நீங்கள் கேட்பது ஒருபோதும் மதிப்பிற்குரிய விஷயம் அல்ல! எனவே கூடுமானவரை எவரிடமும் கடன் வாங்காத ஒரு நிலை இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் நல்லது. வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் கடன் வாங்கலாமே ஒழிய, ஆடம்பரத்திற்காகவும், தேவையில்லாமலும் நீங்கள் வாங்கினால் அதுவே உங்களுக்கு பெரும் துன்பத்தை வந்து கொண்டு வந்து சேர்த்து விடும். உங்களிடம் இல்லாத ஒரு பொருள், வேறு ஒருவரிடம் நிறைந்து காணப்படுகிறது. அவர்களிடம் சென்று நீங்கள் கேட்கும் பொழுது உங்களுடைய கை கூசும், நீங்கள் அவரை நிமிர்ந்து பார்க்கும் பொழுது உங்களுடைய கண்கள் கூசும். இவர் கடன் கொடுப்பாரா? இல்லையா? இவர் கொடுக்காவிட்டால் அடுத்து என்ன செய்வது? என்று புத்தி தடுமாறும். இத்தகைய வறுமையை, ஏழ்மையை விரும்பாதவர்கள் தினமும் இந்த ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அபிராமி அந்தாதி: இல்லாமை சொல்லி ஒருவர்தம், பால்சென்(று) இழிவுபட்டு, நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடுதவம்,கல்லாமை கற்ற கயவர்தம், பால்ஒரு காலத்திலும், செல்லாமை வைத்த திரிபுரை, பாதங்கள் சேர்மின்களே!!! இம்மந்திரம் அபிராமி அந்தாதி பாடலில் இடம் பெற்றுள்ள சக்தி வாய்ந்த மந்திரமாகும். கடன் நீங்கி பெருஞ்செல்வம் அடைய இம்மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்கள் வீட்டில் அபிராமி அன்னையின் திருவுருவப்படம் இருந்தால் அப்படத்தின் முன்பு அமர்ந்து தியான நிலையில் இம்மந்திரத்தை ஒரு முறை மனதார உச்சரியுங்கள். நம்முடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஒருவரிடம் எதிர்பார்த்து, இழிவான நிலையில் இருக்கும் இந்த இயலாமை கடன் வாங்க வைக்கிறது. ஆசையால், துன்பத்தால், இயலாமையால், வறுமையால் கடன் வாங்குபவர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு சூழலிலும் அவமானத்தை சந்திக்கின்றனர். இத்தகைய அவமானத்திலிருந்து விடுபட முடியாமல் பலரும் சிக்கிக் கொண்டு விடுகின்றனர் எனவே கடன் இல்லாத ஒரு நிலையை அடைய அபிராமி பட்டர் எழுதிய இந்த அபிராமி அந்தாதி பாடலை தினமும் ஒரு முறையாவது உச்சரிக்க வேண்டும். இதன் பலனாக யாருடைய தயவும் இல்லாமல், நம்முடைய சுய முயற்சியினால் நம்முடைய தேவையை நிறைவு செய்யும் துணிச்சலை பெறுகிறோம். மேலும் நம்மிடம் இல்லாவிட்டாலும் அதனால் உண்டாகக்கூடிய விளைவை ஏற்று அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இறைவனை முழுமையாக நம்பி, அவர்களை சரணடைந்து நம்முடைய முழு முயற்சியை கொடுத்து வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலை நமக்கு வராது. அத்தகைய ஒரு சூழ்நிலையை இறைவன் நமக்கு உருவாக்கி கொடுக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment