அ.தி.மு.க., அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அலுவலக அதிகாரம் என்னிடம் உள்ளது. அதிமுக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரிவான விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர்கள், வருவாய்த்துறை பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

No comments:
Post a Comment