நம்முடைய எல்லார் மனதிலும் ஒரு ஆசை உண்டு. அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும். அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நம்முடைய வாழ்க்கை மேன்மேலும் உயரத்தில் செல்ல வேண்டும். இன்னும் சில பேருக்கு அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை கூட இருக்கும். இப்படி பணம் சம்பந்தப்பட்ட எந்த ஆசையாக இருந்தாலும் அதை நிறைவேற்றி தருவதற்கு ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்பவர்கள் நிச்சயமாக பணக்கஷ்டத்திலிருந்து வெளிவர முடியும். அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறுகின்றமோ இல்லையோ, அடுத்தவர் முன்பு தலைகுனியும் நிலை உங்களுக்கு வராது இந்த பரிகாரத்தை செய்து வந்தால்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, May 8, 2023
அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வாழ்க்கையில் உயர வேண்டுமா? ஒரே 1 அன்னாசி பூவை கையில் இப்படி வைத்துக் கொள்ளுங்கள் போதும்.**
அடுத்தவர்கள் முன்பு தலைகுனிய வேண்டிய சூழ்நிலை இன்றைக்கு நமக்கு இருக்கிறது என்றால், என்ன காரணம் இருக்கும். யோசித்து பாருங்கள். பெரும்பாலும் நம்மிடம் பணம் காசு இல்லை என்றாலே நம்மை யாரும் இப்போது மதிக்கப் போவது கிடையாது. நீ நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி. பணம் காசு உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரியாதை என்ற சூழ்நிலை வந்துவிட்டது. சரி போகட்டும், உலகம் போகின்ற போக்கில் நாமும் சென்றால்தான் நல்லவர்கள். இல்லை என்றால் தனித்துவமாக தெரிந்தால் நம்மை பைத்தியக்காரர்களாக மாற்றி விடுவார்கள் அல்லவா. ஆகவே, நாமும் கொஞ்சம் பணம் காசு சேர்த்து வைத்துக் கொள்வது தான் நல்லது.
எப்போதுமே உங்களுடைய மணி பர்ஸில் இந்த நட்சத்திர சோம்பு இருக்கட்டும். அதாவது அன்னாசி பூ. அன்னாசி பூ இருக்கும் இடத்தில் நெகட்டிவ் எனர்ஜி இருக்காது. பண ஈர்ப்பு இருக்கும். முக்கியமாக ஏதாவது ஒரு வேலைக்கு போறீங்க அப்படின்னா உங்களுடைய கையோட அன்னாசி பூவை எடுத்துட்டு போங்க. வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒரு அன்னாசி பூவை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ‘நான் செல்கின்ற காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும். நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கட்டும்.’ என்று சொல்லி அந்த அன்னாசி பூவை உங்களுடைய உடம்பில் படும்படி வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அன்னாசிப்பூ உடம்போடு ஒரசி கொண்டிருக்க வேண்டும். ஆடைக்குள்ளே அன்னாசி பூவை போட்டு விட்டு சென்றாலும் கூட தவறு கிடையாது. வீடு திரும்பியதும் அந்த அன்னாசி பூவை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
வாசனை நிறைந்த ஒவ்வொரு பொருளுக்குமே ஒவ்வொரு மகிமை இருக்கின்றது. அந்த விதத்தில் அன்னாசி பூ வசிய தன்மை கொண்ட ஒரு பொருள். இதை வைத்திருப்பவர்களுக்கு ஒரு வசீகரம் ஏற்படும். கண்ணுக்கே தெரியாத ஒரு நேர்மறை வட்டம் அந்த நபரை சுற்றி ஏற்பட்டு விடும். எந்த ஒரு நஷ்டத்தையும் உண்டாக்காமல் தடுக்க கூடிய சக்தி இந்த அன்னாசி பூவுக்கு உண்டு. சமையலறையில் கூட அஞ்சறைப்பெட்டியில் கடுகு மஞ்சள் பொடி கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு மிளகு சீரகம் என்று வைத்திருந்தாலும் அந்த அஞ்சறைப் பெட்டிக்குள் ஒரே ஒரு அன்னாசி பூவை போட்டு வைத்திருந்தீர்கள் என்றால் அதிர்ஷ்டம் பெருகும்.
இரவு நிம்மதியாக தூங்குபவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியும். சில பேருக்கு இரவு தூக்கம் என்பதே இருக்காது. ஒரு சிறிய மஞ்சள் துணியில் இரண்டு அன்னாசி பூவை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். நல்ல தூக்கம் வரும். மறுநாள் காலை உங்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை அந்த அன்னாசிப்பூ ஈர்த்து இருக்கும்.
காலை அதை கொண்டு போய் கால் படாத இடத்தில் வெளியில் போட்டு விடுங்கள். மேல் சொன்ன பரிகாரங்களில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment