Sunday, May 14, 2023

இரவு 12 மணி - திக் திக் நிமிடங்களில் பெங்களூரு #Jayanagar தொகுதியை 16 வாக்குகள் வித்தியாசத்தில் தட்டிச்சென்ற பா.ஜ.க. நடந்தது என்ன?

 இரவு 11 மணி வரை பெங்களூரு ஜெயநகர் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் தொண்டர்கள் குவிந்துக்கொண்டே இருக்க, என்ன தான் நடக்கிறது என இந்தியாவே திரும்பி பார்க்கிறது. பெங்களூரு தெற்கு பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது ஜெயநகர் சட்டமன்ற தொகுதி. கிட்டத்தட்ட நம்ம ஊர் மயிலாப்பூர் தொகுதி போன்று பிரசித்தி பெற்ற, முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி.

நேற்றைய தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி 160 வாக்குகளில் வென்று விட்டார் என அறிவிப்பு வந்து விட்டது. நிற்க.
நமது பூத் ஏஜெண்டுகளோ சில தபால் வாக்குகள் எண்ணப்படவே இல்லையே என கண்டு பிடிக்கின்றனர். உடனடியாக தேர்தல் அதிகாரிகளிடம் சொல்ல, அவர்களும் தங்களது தவறை உணர்ந்து விடுபட்ட தபால் வாக்குகளை எண்ணி முடிக்கையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி என தெரிகிறது. அதை ஏற்க மறுக்கும் காங்கிரஸ்காரர்கள் வெறி பிடித்த மிருகங்கள் போல் சண்டையிட, மறு வாக்கு எண்ணிக்கை கோரப்படுகிறது. முடிவுகள் அதையே காட்ட, மீண்டும் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை ஐந்து முறை கோருகின்றனர். தேர்தல் அதிகாரிகளும், பா.ஜ.க-வினரும் சுணக்கமின்றி ஒப்புக்கொள்ள மீண்டும் மீண்டும் அதே முடிவுகளே.
ஜெயநகரில் பா.ஜ.க 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. நிற்க..
இத்தொகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக 2008 முதல் 2018 வரை இருந்தவர் திரு.BN விஜயகுமார். இவர் அப்படியே நம்மூர் MR காந்தி. ஸ்வயம்சேவகர், திருமணம் செய்துக்கொள்ளவில்லை, சதாசர்வ காலமும் மக்கள்ப்பணி, எதிர்க்கட்சியினர் கூட கையெடுத்து கும்பிடும் பண்பாளர். 2018-ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டார். பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு வந்து இறந்து விட்டார். அதனால் அத்தொகுதிக்கு மட்டும் கடந்த முறை தேர்தல் தள்ளிப்போனது. பின் அங்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராமலிங்க ரெட்டியின் மகளும், ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தியவருமான செளமியா ரெட்டி வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...