1. இரண்டே நாட்களில் இவ்வளவு பேரை கைது செய்ய வேண்டுமானால், அவர்கள் அனைவரும் "இங்கே கள்ளச்சாராயம் விற்கப்படும்" என விளம்பரப் பலகை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்களா?
2. அல்லது, அந்த இடங்கள் அனைத்தும் ஏற்கனவே காவல்துறைக்கு தெரிந்திருந்தும் அவர்களைக் கைது செய்யாமல் இருந்தார்களா?
3. கடந்த இரண்டு வருடங்களில் கள்ளச்சாராய தயாரிப்பு மற்றும் விற்பனை வழக்குகள் போடப்பட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்?
#வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவத்திற்குக் காரணமானவர்களை கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காவல்துறை இன்னும் உருட்டுவது ஏன்?
#திருமாவளவன் கோடை விடுமுறைக்காகச் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறாரா?
கள்ளச்சாராயம் உரிமம் ஏலம்:
மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், ஒரு வருடத்திற்கான கள்ளச்சாராய விற்பனைக்கான அனுமதியை, 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை, கிராமப் பஞ்சாயித்தினர் ஏலம் மூலம் வழங்குகின்றனர்.
மரக்காணத்தில் மொத்தம் 65 பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.
சராசரி ஒரு பஞ்சாயத்திற்கு 2 லட்சம் என்று வைத்தால்கூட. 65 பஞ்சாயத்துக்களுக்கு 1.3 கோடி.
தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன? தலை சுத்துதடா பாவிகளா.
(ஆதாரம் : ஜூ.வி. 21/05/23)
No comments:
Post a Comment