Thursday, May 18, 2023

நீங்கள் சொல்லும் விரல்களோ அல்லது கைகளே கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்வது?

 பொதுவாக திருநீரை ஐந்து விரல்களில் ஏதாவது ஒரு விரலில் தொட்டு எடுத்து நெற்றியில் வைப்பது வழக்கம். அது எவ்வளவு தூரத்துக்கு சரி?... திருநீரை குறிப்பிட்ட ஏதாவது விரலில் தான் எடுத்துப் பூச வேண்டுமா என்று கேட்டால் ஆம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. விபூதியை அணிவதற்கு சில விரல்களைப் பயன்படுத்தும் போது நன்மை உண்டாகும். சில விரல்கள் தீமையை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

கட்டை விரலால் திருநீறை எடுத்து அணிந்தால் தீர்க்க முடியாத வியாதிகளுக்கு ஆளாக நேரிடும். ஆள்காட்டி விரலால் திருநீறை எடுத்து அணிந்தால், பொருள் நாசம் உண்டாகும்.
நடுவிரலினால் திருநீறைத் தொட்டு அணிந்தீர்கள் என்றால் மன நிம்மதி பறிபோய்விடுமாம்.
மோதிர விரலால் திருநீறை எடுத்து கிழக்கோ அல்லது வடக்கோ திரும்பி நின்று திருநீறை அணிந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.
சுண்டு விரலினால் திருநீறை எடுத்து அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் உண்டாகும்.
மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து வைத்து திருநீறினை எடுத்து, அதை மோதிர விரலில் குவித்து, மோதிர விரலின் மூலம் நெற்றியில் அணிந்து கொண்டீர்கள் என்றால், உலகமே உங்களுக்கு வசப்படும். நீங்கள் எந்த காரியத்தை நினைத்து திருநீறு அணிகிறீர்களோ அது நிச்சயம் வெற்றி பெறும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...