Sunday, May 7, 2023

ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.

 எங்க வீட்டுப் பிள்ளை1965..

நான் பார்த்தது 1982 க்கு மேல்😒.
எம்ஜிஆர் படங்கள் பார்க்க வேண்டும் என நினைத்தாலே முதலில் ஞாபகம் வருவது இவரின் துள்ளலான, உற்சாகம் குறையாத நடிப்பு தான். படம் பார்ப்பவர்களையும் சுறுசுறுப்பாக வைக்கும்.
அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?.
இரட்டை வேடத்தில் நான் பார்த்த முதல் புரட்சி தலைவர் படம் என்பதாலோ என்னமோ பார்க்க பார்க்க சலிக்காத படம் என்றாகி விட்டது.
தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது.
எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது.
இந்த படம் பற்றி எல்லாருக்கும் எல்லா விசியமும் தெரியும்.
புதுசா சொல்ல எதும் இல்லை. ஆனாலும் பிடித்த விசியங்களை சொல்லலாம்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும்.
மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யக்கூடிய வித்தை புரட்சி தலைவருக்கு நன்றாவே தெரிந்திருந்தது.அதற்கு தக்கவாறு இந்த படம் மக்களின் எதிர்பார்ப்பை
100% நிறைவேற்றியுள்ளது இதன் வெற்றியை பார்த்தாலே புரியும்.
நம்பியார், அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.
நியாயம் அநியாயத்திடம் பணியும் போது,
அதே நியாயம் அநியாயத்தை பணிய வைப்பதே பார்ப்பதே உற்சாகம் தான்.
தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடி உபதேசம் பிற்கால இரட்டை வேட திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக மாறிவிட்டது.ஆனாலும்
‘அசல் ஒரிஜினல் மிட்டாய்’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான்.
தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.
கிராமத்து காதலியுடன் ராமுவை பார்த்து, இளங்கோ என நினைத்த சரோஜாதேவி
இதை அப்பா ரங்காராவிடம் சொல்லி அழ,
அந்த நேரம் பார்த்து இளங்கோ வருவார்.
"நீ இனி மாப்பிள்ளை இல்ல வெளியேபோ "
என ரங்கா ராவ் சொல்லிவிடுவார்.
மாடியிலிருந்து பார்க்கும் சரோஜாதேவி கீழே வந்து,"ஏன் இப்படி துரோகம் செஞ்சீங்க எனக்கு?"
"எம்மேல நம்பிக்கை இருந்தா எங்கூட வா"
என இளங்கோ சொல்ல,
காதலை விட்டு தரமுடியாமல், காதலனை நம்பும் சரோஜாதேவி தேவி அவருடனே செல்வார்.
அருமையான
சீன்.
மகளின் சின்ன சிணுங்கலை கூட பொறுக்க முடியாத அப்பாவாக ரங்காராவ்
கச்சிதமான பொருத்தம்.
நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
இளங்கோவிடம் அடிவாங்கிய நம்பியார் முதுகில் ஓத்தடம் கொடுக்கும் சீனில்,
"மச்சான்னு இவரு விளையாடினாரு,
மாமான்னு அவரு விளையாடினாரு.
ஆனாலும் கொஞ்சம் அதிகமாகவே போச்சு" என தங்கவேலு சொல்லும் காட்சியில் உற்சாகப்படாத ரசிகர்கள் உண்டா?.
இது போன்ற நிறைய காட்சிகள் படத்தில் உள்ளதால் தான் இப்பவும் இந்த படத்தை ரசிக்கலாம்.
‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் என்பது 30 வருடங்களுக்கு பின்பே கண்டுபிடிக்க வேண்டியதானது பாருங்கள்.
ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது.
சொத்துக்காக அலையும் மாமா,
அக்காவின் பேச்சை மீற முடியாத அப்பாவி தம்பி, பயம் என்றால் என்னவென்று தெரியாத இன்னொரு தம்பி, அவனை உண்மையாக காதலிக்கும் பணக்கார காதலி இவர்களை சுற்றியே பின்னப்பட்ட தெளிவான திரைக்கதை.
எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், சுறுசுறுப்பும், சரியான கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த படத்துக்கு திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம்.
அதுதான் இந்த படத்தை இன்றும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்கிறது.
நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான்.
இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.
ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது, அன்றைய ரசிகர்கள் மட்டுமின்றி , அவரை விரும்பும் இன்றைய ரசிகர்களும் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை.
ஆனால், அடிக்கும் வேகத்தை பார்ப்பதிலும், எம்ஜிஆரின் உணர்வுபூர்வமான பாடலிலும்,
ஒரு விசியத்தை பலர் கவனிக்க தவறிவிட்டுள்ளனர். இதுவே வேறு சிலர் கூறிய பின்பே மீண்டும் அந்த காட்சிக்காகவே படம் பார்த்ததுண்டு.
அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள்?,
வீட்டில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், அடிக்கும் போது ஏன் அங்கு வந்தார்கள்? என்று யாரும் கேட்கவில்லை.
காரணம், சவுக்கு கையில் வந்ததும், இளங்கோ புரட்சி தலைவராகிவிடுகிறார். பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள்.
“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று, கணீர் குரலில் சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.
மக்களுக்காக தான் இருந்ததை எவ்வளவு
நேர்த்தியான காட்சியில் சொல்லியுள்ளார்.
எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் பூசப்பட்டாலும், புரட்சி தலைவரை விரும்பும் மக்களுக்கு இந்தப் படம் மறக்க முடியாத படம் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது
என்பது மறுக்க முடியாத உண்மை.
May be an image of 1 person and performing martial arts
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...