Thursday, May 18, 2023

ராகுலின் மர்ம பயணங்கள்..!!

 ராகுல் காந்தி அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு போவதும்.. பயணங்கள் ரகசியமாக வைத்து கொள்வதும் தான் எப்போதும் நடக்கும் விசயம் ஆகும்...

அவ்வாறு போகும் போது என்ன என்ன நோக்கத்தில் செல்கிறார்.. யாரை எல்லாம் சந்திக்கிறார் என்பது எல்லாம் மர்மமானதாகவே இருக்கிறது...
அவர் பட்டாயா போகிறார்.. பாங்காக் போகிறார் உல்லாசமாக இருக்கிறார் என சிலர் சொல்லலாம்..
தனிப்பட்ட அவரது பயணம் எவருக்கும் தீங்கில்லாத தனது சொந்த விசயம் எனில் அதை பற்றி பேசப்போவதில்லை..மிஞ்சி போனால் அவ்வளவு செலவு எப்படி செய்கிறார் என வேண்டுமானால் நாம் கேட்க முடியும்!! அது எல்லாம் இந்த பதிவுச்செய்திக்கு முக்கியம் இல்லை..
ஆனால்..
ராகுல் போய் வந்த உடனேயோ அல்லது அவர் அந்நிய மண்ணில் இருக்கும் போதெல்லாம் இந்தியாவை பற்றிய நெகடிவ் செய்திகள் அந்நிய முக்கிய நாளேடுகளில் வருவதும் தற்செலயா அல்லது ஏதோ ஒருவகை லிங்க்கா என்பது பொதுமக்கள் நாம் சரியாக சொல்லிவிட முடியாது..
மேலும் இந்தியாவில் திடீர் போராட்டங்கள்..
உரிமை கேட்கும் ஜனநாயக போராட்டம் எனும் பெயரில் பெரும் சதித்திட்ட போராட்டங்கள் வெடிக்கின்றனவே....
சமீபத்தில் ராகுல் பிரிட்டன் பயணம் செய்த போது கேம்ப்ரிட்ஜ் பேச்சுகள் சர்ச்சை ஆனாலும்
இன்னொரு முக்கிய ரகசியம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...
இந்தியாவின் அழிவுக்கு பொருளாதார தாக்குதலும்.. ஊடகங்களை தனது பண பலத்தால் கையில் வைத்துக் கொண்டு பல்வேறு முறைகளில் சதிகார சூழ்ச்சிகள் மூலம் இந்தியாவை வீழ்த்திட பிணம் திண்ணி வல்லூறாக வட்டமிடும் கிழட்டு குள்ளநரி பணக்கார முதலை ஜார்ஜ் சோரஸின் மனைவி ராகுல் இருந்த அதே இடத்தில் பலமணி நேரம் இருந்துள்ளார்...
அதே போல அதே இடத்தில் இருந்தது இந்தியாவை வன்முறை மூலமும் மதவாதம் மூலமும் தீவிரவாதம் மூலமும் அழித்திட தினம் தினம் உழைக்கும் பாகிஸ்தான் தேசத்து உளவுத்துறை ISI தலைவர் கூட இருந்துள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வருகின்றன..
இதை சொல்வது ஒரு நம்பகமான அயல்நாடு வாழ் ஊடக மற்றும் எழுத்தாளர் ஆவார்..
இதை போன்ற பலப்பல சந்தர்ப்பங்களில் சந்தேகக் கருமேகங்கள் எப்போதுமே ராகுலை சூழ்ந்து கொண்டே இருக்கின்றன..
மோடிக்கும் அஜித் தோவலுக்கும் அமித் ஷாவுக்கும் இதெல்லாம் தெரியாமல் இராது..
ஏன் உண்மைகள் பட்டவர்த்தனமாக்கப் படாமல் ஏன் இருக்கின்றன என தெரியவில்லை..
ராகுல் நல்லவராக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசைகள்...
இந்நிலையில் இந்த மாதக்கடைசியில் அவர் அமெரிக்கா புறப்படுகிறார் என்பது இப்போதைய செய்தி....
அவரது பயணங்களும் ரகசியங்களும் சந்தேகத்தை தூண்ட கூடாது என்பதை அவர் உணர வேண்டும்..
அவரது செயல்பாடுகள் வெளிப்படையாக இருந்தால் எவருக்கும் ஐயம் வராது மட்டும் அல்ல அவர் மீது வீணான கேள்வி கேட்க வேண்டிய சூழலும் இராது என்பதை அவர் தான் உணர வேண்டும்..
அல்லது ஒருவேளை சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டால் அரசு இதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது
May be an image of 1 person, map and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...