Thursday, May 18, 2023

நேற்று சொந்த வேலையாக சேலம் சென்று திரும்பிய போது என்னை பாதித்த இரண்டு விஷயங்கள்...

 முதல் விஷயம்: பத்து ரூபாய் காயின் வாங்க மறுத்த அரசு போக்குவரத்து நடத்துனரிடம் பயணி ஒருவர் காரணம் கேட்டது; சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் இந்திய அரசின் அங்கீகாரத்துடன் நாசிக் மூலம் ரிசர்வ் பேங்க் வெளியியிட்ட நாணயம் செல்லாது; வாங்க முடியாது எனச் சொல்வது இந்திய நாணயமாற்று சட்டத்தை அவமதிக்கும் செயல் அல்லவா? பத்து ரூபாய் காயின் பெறக்கூடாது என்ற உத்தரவு ஏதும் உள்ளதா? அது என்ன சிங்கை, இலங்கை, பாக்., வங்கதேசம் ஆகிய வெளிநாட்டு நாணயமா? இதே நிலைதான் புதிதாக வெளியிட்ட இருபது ரூபாய், சிறிய ஐந்து ரூபாய் நாணயங்களுக்கும்...

தமிழக அரசும், மத்திய அரசும் தெளிவுபடுத்தினால் நல்லது...
அடுத்த விஷயம் சேலம் புறநகர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கடைகள்; பயணிகள் உட்கார இருக்கைக்கு துளி கூட இடமின்றி (இருக்கைகளும் அமைக்கப்படவில்லை எங்குமே) வரைமுறை இன்றி வைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்; இதே நிலை தமிழகத்தின் (கிருஷ்ணகிரி, ஓசூர் தவிர) அனைத்து பஸ் நிலையங்களுக்கும் பொருந்தும்..
அரசுக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் சௌகர்யங்களைவிட வாயாபாரிகள் சௌகர்யங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?,
இத்தனைக்கும் எவரும் மூறையாக அரசுக்கு வரிகள் ஏதும் செலுத்துவதாகவும் தெரியவில்லை...ஏன் இந்த நிலை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...