Thursday, May 4, 2023

அப்படியே நடந்தால் மிகவும் நல்லது.நாட்டுக்கும், கர்நாடகா விற்கும்.

 கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடும். பாஜக நிறைய கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு விட்டது என்றெல்லாம் பெரும்பாலோனோர் சொல்லிக் கொண்டிருந்தனர். கள நிலவரமும் அப்படித்தான் தோன்றியது. பாஜக தனிப்பெரும் கட்சியாக வரலாமே அன்றி ஆட்சி அமைக்க வேண்டிய மெஜாரிட்டி கிடைக்காது என்று பல கருத்துக் கணிப்புகளும் சொல்லின.

ஆனால் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுமாம். அது போல காங்கிரசின் தேர்தல் அறிக்கை வந்து கள நிலவரத்தை மாற்றி விட்டது என்று தோன்றுகிறது. பஜ்ரங் தள்ளை தடை செய்வோம் என்று காங்கிரஸ் சொல்லியிருப்பது பெரும் வெறுப்பை விதைத்திருக்கிறது. ஹிந்துக்கள் பெரும்பாலும் இதை எதிர்பார்க்கவில்லை. எனவே மனம் வெந்து கிடக்கிறார்கள்.
இதைத்தவிர மோடியின் கர்நாடகப் பிரச்சாரமும் பெரிய ஆதரவு அலையைத் தோற்றுவித்திருக்கிறது என்றே தெரிகிறது.
எல்லாக் கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி பாஜக யாருடைய தயவுமில்லாமல் ஆட்சி அமைத்து விடும் என்பதே என் கருத்து.
May be an image of 4 people, crowd and text that says 'IndianOil SUL'
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...