Thursday, May 18, 2023

எனக்கு ஒரு டவுட்டு..?

 "#கள்ளச்சாராயம்கிறது சட்ட விரோதமானதாச்சேப்பா..ஏன் அத குடிச்சிட்டு செத்தவனுக்கு தியாகி வேஷம் போட்டு காட்டுறீங்க..? விடுங்கப்பா.."

(ஆமா..இவரு பெரிய சட்டப்படி நடக்கிற சட்டாம்புலி... பேச்சைபாரு..)
"டேய்..என்னடா முனங்கல்...? "
" ஒன்னுமில்லணே...கொசு கடிச்சுது.,வெறட்டிணென்ணே.."
" அதுதான் நாம #டாஸ்மாக்க ஓப்பன் பன்னிவெச்சு சேவை செய்திட்டிருக்கோம்.?..இவனுக கண்ட கண்டத குடிச்சிட்டு சாவகூடாதுனுதான..!!? எதுக்கு இந்த மாதிரி அறியாமையாலேயே கெடக்கிறானுக..? பத்து லட்சம் குடுத்து அடக்கிறமாதிரியாச்சு...!!
" அண்ணே...#விபத்துல செத்தவனுகளுக்கு கொஞ்சமா பணம் குடுக்கீங்க..ஆனா, இந்த பயபுள்ளைகலுக்கு அள்ளி வுடுறீங்க..எப்புடி.."
" டேய் இவனுக பத்து குடும்பமனா.. நூறு ஓட்டுக்கு சமம்டா...இவனுகளதான் நாம ரொம்ப கவனிக்கனும்.."
" அண்ணே #பெரியார் இருந்திருந்தா பகுத்தறிவால இந்த கல்லுலிகள திருத்திருப்பாருணே.."
"ஆமாடா..அவரு இல்லாததுதாண்டா பெரிய இழப்பு எனக்கு..."
" ஏண்ணே.. எனக்கு ஒரு டவுட்டு..?
" கேளுடா"
" #டாஸ்மாக்கே சட்டவிரோதம் இல்லையா?..! குடும்பத்தை சீரளிக்கிற ஒரு கெரகத்துக்கு ஒரு துறைய அமைச்சி, மினிஸ்டர் போட்டு, அரசாங்க வேலையாளுகள போட்டு , பொருப்பில்லாத மக்கள உருவாக்கி, குற்றவாளிகள பெருக்கி....நாட்டை குட்டிசுவராக்கிற பண்பு எல்லாம் ஒரு தலைவனுக்கு அழகாணே??? நீங்க என்னமோ சட்டப்படி நடக்கிற சட்டாம்புலி மாதிரி பேசுறீங்க..?"
" அடேய்..இத நீ முனங்கும்போதே கேட்டுச்சி...! அதெல்லாம் கண்டுக்க படாது..! அரசியல்னா அப்பிடிதாண்டா...நல்லவன் மாதிரி நடிக்கிற மொல்லமாரித்தனம் கொண்டவன்தான் அரசியல்வாதி.."
"அப்பிடினா "
" பழம்திண்ணு கொட்டை போட்டவனெல்லாம் அரசியல்வாதி கெடையாது...கொட்டைகுள்ள இருந்து பழத்தை எடுத்தவன்தான் அரசியல்வாதி "
"அடேங்கப்பா...சூப்பரண்ணே".
May be an image of 1 person
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...