Tuesday, May 16, 2023

எந்த அரக்கனாலும் அழிக்க முடியாத மதம்.

 இந்த நாட்டில் சில மென்டல்கள் தங்களை அறிவாளி களாக காட்டிக்கொண்டு புதுப்புது கேள்விகளை கேட்கிறார்கள்.

அதையே பகுத்தறிவாளர்கள் / மூடர்கள் மனப்பாடம் செய்து வந்து நம்மிடம் வாந்தியெடுத்து கேள்வி கேட்கின்றன.
இப்படிப்பட்ட கேள்விகளில் ஒன்று தான், இந்து மதம் என்று ஒன்று 200 வருடங்களுக்கு முன்பே இல்லை. இருந்திருந்தால் உங்கள் வேதங்கள் புராணங்கள், இதிகாசங்கள், 200 வருடங்களுக்கு முன்னதான இலக்கியங்களில் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டு காமெடி செய்கின்றனர்.
இவர்களுக்கு புரியும் படியாக சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் விதண்டாவாதமாகத்தீன் பதில் சொல்ல வேண்டும்.
இன்று கடைகளில் தேங்காய் எண்ணை என்று கேட்டால் பல பெயர்களில் தேங்காய் எண்ணை கிடைக்கிறது. VVD, பாரசூட், VD. இப்படி பல பிராண்டுகளில் கிடைக்கிறது. கூடவே நாட்டுச்செக்கு தேங்காய் எண்ணையும் கிடைக்குறது. சுமார் ஐம்பது வருடத்திற்கு முன் இதில் எதுவெல்லாம் இருந்தது...?
எதுவுமே இல்லை. நாட்டுச்செக்கு தேங்காய் எண்ணையை தவிர.
அப்போது கிடைத்த அந்த ஒரே தேங்காய் எண்ணையின் பெயர் என்ன...?
அதற்கு பெயரே கிடையாது. தேங்காய் எண்ணை...! இது தான் பெயர்.
பிற்காலத்தில் இயந்திர செக்கு, ரிபைனரீஸ் என்று ஒவ்வொன்றாக வந்தது. எண்ணை தயாரிப்பவர்கள் தங்களின் அடையாளக்குறியீடாக மேற்சொன்ன VVD, பாராசூட் என தங்களின் தயாரிப்புக்கு பெயர் வைத்தனர்.
பெயர் இல்லாத பழைய முறையில் ஆங்காங்கே தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணைக்கு அதன் தயாரிப்பு முறையே பெயராகி இன்று நாட்டுச்செக்கு எண்ணை என்று அழைக்கப்படுகிறது.
இந்த அறிவாளிகளுக்கு/மென்டல்களுக்கு நான் சவால் விடுகிறேன். தமிழ் நாட்டில் நாட்டுச்செக்கு எண்ணை என்ற பெயரில் ஐம்பது வருடத்திற்கு முன் ஏதாவது டுமீலர்களின் இலக்கியங்களில் ஆதாரத்தை காட்ட முடியுமா...?
கண்டிப்பாக முடியாது. காரணம் அன்றைய கலத்தில் எண்ணை என்றாலே அது நாட்டுச்செக்கில் பிழிந்தெடுக்கப்பட்டது தான். அதற்கு மாற்று இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை.
இவர்களின் மொக்கை வாதப்படி பார்த்தால் ஐம்பது வருடங்களுக்கு முன் நாட்டுச் செக்கு என்றே ஒன்று கிடையாது. நாட்டுசசெக்கு இல்லாமல் டுமீலனுக்கு எண்ணை எப்படி வந்தது....?
இவர்களின் விதண்டாவாதமும் இப்படித்தான் உள்ளது.
200 வருடங்களுக்கு முன்பு வரை இந்து மதம் என்ற பெயரே கிடையாது தான். காரணம் வேதங்களில் உள்ள கடவுள்களை வணங்குவதில் அதற்கு எந்த மாற்றும் இல்லை. அதனால் பெயரும் தேவைப்படவில்லை.
கிறிஸ்துவனும், முஸ்லிமும் இந்த நாட்டில் நுழைந்தவுடன் தங்களின் இறை வழிபாட்டிலிருந்து வேறுபட்ட இந்த நாட்டு மக்களை அடையாளப்படுத்த இந்து என்ற சொல்லை உருவாக்கினார்கள். இங்குள்ள மக்களுக்கு அதுவே பின்னர் அடையாளமாகிப்போனது அவ்வளவு தான்.
இன்னும் தெளிவாக சொல்லலாம்.
இன்று கருணாநிதியின் பெயர் என்ன?
பெற்றோர் வைத்த பெயர் தட்சிணா மூர்த்தி. அவருக்கு அவரே சூட்டிக்கொண்ட பெயர் கலைஞர்.
கருணாநிதிக்கு 40 வயதில் தான் கலைஞர் என்ற பெயர் வந்தது. அதனால் 40 வயது வரை கலைஞர் என்கிற நபரே உலகில் இல்லை என எடுத்துக்கொள்ளலாமா....?
திராவிட/கிருஸ்துவ முட்டாள்கள்/போராளிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா.....!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...