Wednesday, May 10, 2023

சுஜாதா வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தது பெருமை கொள்ள செய்கிறது நிறைய படித்துள்ளேன்.

 முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமும், சுஜாதாவும் கல்லூரித் தோழர்களாவர்.

மின்னணு வாக்கு இயந்திரம் தயாரித்த தலைமைக்குழுவில் இடம்பெற்றிருந்தவர் சுஜாதா.
அடிப்படை நிலையிலான விமானஓட்டி பயிற்சியும் பெற்றிருந்தவர் சுஜாதா.
"நினைத்தாலே இனிக்கும்" படத்திற்கு சுஜாதா திரைக்கதை−வசனம் எழுதினார். எனினும், அவருடைய திரைக்கதை ஏற்கப்படவில்லை. வசனம் மட்டும் ஏற்கப்பட்டது.
ஒரே ஒரு எழுத்தை மட்டுமே, தன் நாவலுக்குப் பெயராக வைத்த தமிழின் முதல் நாவலாசிரியர் சுஜாதாதான். நாவலின் பெயர் "ஆ".
அனிமேஷன் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய முதல் தமிழ் எழுத்தாளரும் சுஜாதாதான். படத்தின் பெயர் "பாண்டாவாஸ் தி ஃபைவ் வாரியர்ஸ்" .
வண்ணதாசன், கலாப்ரியா, நா.முத்துக்குமார் உள்ளிட்ட பல கவிஞர்கள் தமிழ் கவிதையுலகில், பிரபலமாக வழிவகுத்தவர் சுஜாதா.
சுஜாதா, தன் முதல் சிறுகதையை, தன் 18 வயதில் எழுதினார். பெயர் "எழுத்தில் ஹிம்சை"; வெளியான பத்திரிக்கை "சிவாஜி"(திருச்சியில் வெளிவந்த பத்திரிக்கை). இதற்குப் பிறகு, அவர் தனது 30 வது வயதில்தான் எழுதினார். இவ்வளவு நீண்டகால இடைவெளிக்குப் பின் எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் சுஜாதாதான்.
"பாரதி" படத்தின் இணை தயாரிப்பாளராகவும் சுஜாதா செயல்பட்டார்.
தன்காலத்திலேயே, தனது நாவல்கள் சில, அபத்தமான வகையில் திரைப்படமாக்கப்பட்டதைக் கண்டு, மனம் வருந்திய ஒரே தமிழ் எழுத்தாளரும் சுஜாதாதான். இத்தனைக்கும் மேற்படியான சில படங்களில், இவரும் பணியாற்ற நேர்ந்தும், அபத்தமாகப் படமாக்கப்படுவதைத் தடுக்க இயலவில்லை.
அறிவியல்துறை சார்ந்த தமிழ் எழுத்தாளராக இருந்தாலும், பழந்தமிழ் நூற்களையும், செய்யுள்களையும், இளையதலைமுறையினரும், எளிதாகவும், இனிதாகவும் அறியும் வகையில் சில எழுத்தாக்கங்களை சுஜாதா அளித்தது குறிப்பிடத்தக்கது (எ.கா: ஆழ்வார்களின் பாசுரங்கள், "புறநானூறு எளிய அறிமுகம்" நூல்).
தமிழ் எழுத்தாளர்களிலேயே, திரைப்பட விமர்சகராகவும் இருந்து, கடுமையான பாணியிலான திரைவிமர்சனங்களை வெளியிட்ட சிறப்பும் சுஜாதாவிற்கே உரியது. கணையாழியின் கடைசி பக்கங்களில், அவர் வெளியிட்ட திரைப்படவிமர்சனங்கள் அவருக்கு சர்ச்சையையும், புகழையும் ஒருசேர பெற்றுத்தந்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...