Sunday, May 7, 2023

கர்நாடக_தேர்தல்_ஓர்_அலசல் .

 கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல்

வரும் 10/05/2023 அன்று ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை , 13/05/2023 அன்று நடைபெறும்.
மொத்தம் 224 தொகுதிகளுக்கான தேர்தலில்,
113 இடங்களைப் பிடிக்கும் கட்சி ஆட்சியமைக்கும். இப்போது, தேர்தல் பிரச்சாரங்களுக்கு 5 நாட்களே மீதமுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் , ஆகிய மூன்று கட்சிகளே பிரதானமாக மோதுகின்றன.
முக்கியப் பிரமுகர்கள் , தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா போன்றவர்களோடு, மாநிலத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் பலரும் பிரச்சாரம் செய்கின்றனர்.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மாநில காங்கிரஸ் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முடுக்கி விட்டது.
ஆனால்,
பாஜக, வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தரப்பட்ட இறுதி நாளுக்கு முன்புவரை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கர்நாடக தேர்தல்
பொறுப்பாளராகவும், ஆலோசகராகவும், மத்திய பாஜக தலைமை நியமித்திருந்தது.
.
பாஜக வேட்பாளர்களைத் தெரிவு செய்வது இம்முறை மிகவும் கடினமான பணியாக இருந்தது.
இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி, காங்கிரஸில் இணைந்து , Seat பெற்றனர்.
காங்கிரஸிலிருந்தும் சிலர் இப்படி வெளியேறியிருந்த போதும், பாஜகவில் அதிருப்தியாளர்கள் பெரும் நெருக்கடி தந்தனர். எனினும், பாஜக வின் வெற்றிக்கு யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தீவிரமாக ஆலோசனை செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் பல புதுமுகங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
பொதுவாக, கர்நாடகா மக்கள் எப்போதும்
தீர்வான முடிவைத் தருவதை விட குழப்பமான முடிவுகளைத் தரும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்கள்.
இவர்களிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை .
அங்கு, கர்நாடகா உருவானதில் இருந்து, முழு ஐந்து ஆண்டு கால ஆட்சியை ஆண்டு முடித்த அரசுகள் வெகு சிலவே.
.
தொங்கு சட்டமன்றம் அமைந்து தடுமாறுவதும்,, இடையில் கவிழ்வதும், கூட்டணிகள் மாறுவதும், இங்கே சகஜம்,
இரண்டாவது தடவையாக ஒரு கட்சி தொடர்ந்து ஆண்ட சரித்திரம் எல்லாம் இங்கே கிடையாது. மக்களின் தீர்வு, இங்கே இப்படித்தான் என கணிக்க இயலாது.
.
எனினும், Double Engine Government அமைந்த வகையில், மத்திய பாஜக
மாநிலத்திற்கு நிறைய திட்டங்களையும், நிதி ஆதாரங்களையும் தந்துள்ளது.
காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போது செய்ததை விட இது பல மடங்கு அதிகம். இதைப் பற்றி பேச தனியாக ஒரு கட்டுரை தேவைப்படும்.
எனினும், மாநில வளர்ச்சியில் தன் பங்களிப்பை விளக்கி மக்களிடம் கொண்டு செல்ல பாஜக தவறிவிட்டது.
.
காங்கிரஸ் , பாஜகவின் சீர்திருத்த நடவடிக்கைகளையும், சிறுபான்மையினருக்கு இதுவரை தரப்பட்டு வந்த முறையற்ற சலுகைகளைக் குறைத்ததையும் பெரிது படுத்தி, மக்களை நம்ப வைக்க முயல்கிறது.
.
பாஜக ஆட்சிக்கு வந்ததில், தமிழகத் திற்கு ஒரு முக்கிய பலன் கிடைத்தது.
அது காவிரி நதிநீர் தீர்வாயத்திற்கு ஒப்புதல் தந்தது . இதுவரை காங் ,ஜனதா, என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடகா காவிரி நதிநீர்ப் பங்கீடு ஆணையம் அமைக்க அனுமதி தர ஒத்துக் கொண்டதில்லை
.
இப்போது, இந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள்?, என்ற
கேள்விக்கு இன்று வரை ,எதையும் கூற இயலவில்லை.
தொங்கு சட்டமன்றம் அமையும் எனக் கூறப்பட்டாலும், கடந்த நான்கைந்து நாட்களில் , மாறி மாறி கணிப்புகள் கூறப்படுகின்றன.
.
ஒரு புறம் லிங்காயத்துகளின் அதிருப்தி, முஸ்லீம்களுக்கான மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை
மாநில அரசு நீக்கியதில் அதிருப்தி,
பர்தா அணிவது விஷயமாக பாஜக எடுத்த கடுமையான நிலைப்பாடு, PFI செயல்பாடுகளை ஒடுக்கியது, தீவிர வாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எல்லாம், பாஜகவுக்கு
பின்னடைவை ஏற்படுத்தும் என்றாலும், இதே விஷயங்களில்
இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கு பெருகவும் உதவியுள்ளது.
பாஜக, தன்னுடைய தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக.
1 Uniform Civil Code .
2 National Register for Citizens
3. வறுமை கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் தருவது.
4. அதே BPL மக்களுக்கு தினமும் அரை லிட்டர் பால், சத்துக் குறைபாட்டை நீக்க தருவது.
5. ஒவ்வொரு வார்டிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில்
ஏழைகள் வாங்கக் கூடிய குறைந்த விலையில் உணவுகள் தரும் கூடங்கள் அமைப்பது.
பள்ளிகளில் கல்வி மேம்பாடு, ஏழைக் குழந்தைகளுக்குத் தரமானகல்வி, விவசாயிகளுக்கு விவசாயப,உணவுப் பொருட்களை
சேமித்து வைக்க கிடங்கு வசதி, பெங்களூருவின் சுற்று வட்டார துணைநகரங்களை சர்வதேச அளவில் உயர்த்துவது , இப்படி பல
16 சிறப்பம்சங்களைக் கொண்ட
நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகளைத் தந்துள்ளது இதன் தயாரிப்பிலும் அண்ணாமலை அவர்களின் ஆலோசனை இருந்துள்ளது.
.
இதற்கு போட்டியாக, காங்கிரஸூம் நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு போலவே, அள்ளி வீசப்பட்டுள்ளது. குஜராத் மக்கள், இதை நம்பவில்லை. ஆனால் கர்நாடக மக்கள் நம்பினால், தமிழக மக்களின் நிலைதான்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
1. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்
₹2,000/_ ( எல்லா தலைவிகளுக்குமா, அல்லது திமுக போல பிற்னாளில் தகுதியான தலைவிகளுக்கா என குறிப்பிடவில்லை).
2. தமிழகம் போலவே அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம்.
3.எல்லோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.
4.படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு , 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹3,000/_ உதவித் தொகை.
ITI,Polytechnic படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹1,500/_.
5. மீனவர்களுக்கு 500 லிட்டர் டீசல்
.
6.மேகே தாட் தடுப்பணை கட்ட ₹9,000/_ கோடி ஒதுக்கீடு.
இன்னும் பல பணப்பயன்கள் தரப்படும் என அள்ளி வீசப்பட்டுள்ளது. இதெயெல்லாம் எப்படி, எந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு நிறைவேற்றுவார்கள், என்பது மில்லியன் டாலர் கேள்வி. தமிழகத்தில் இப்படி திமுக கூறி மக்களை ஏமாற்றியது.
மூடப்பட்ட கோலார் தங்கவயலில் தங்கம் பாளம்,பாளமாக வெட்டி எடுத்தால் ஒருக்கால் நிறைவேற்ற இயலும்.
இப்படி நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை, கூட்டணி கட்சியான திமுக ஆலோசனை தந்திருக்க வேண்டும்.
இது இப்படியிருக்க, காங்கிரஸ், பாஜகவை
இலவசங்களைத் தரமாட்டோம் என்று கூறும் பாஜக , இலவச சிலிண்டர், அரை லிட்டர் பால் தருவதை கிண்டல் செய்து தாக்கி வருகிறது.
ஆனால், காங்கிரஸ் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டது. பாஜக, காங்கிரஸ் தந்துள்ள வாக்குறுதி போல் எல்லா குடும்பத்திற்கும் இலவசம் தரவில்லை. BPL- வறுமை கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு தான் இலவச கேஸ் சிலிண்டர்கள், பால் , தருவதாகக் கூறியுள்ளது.
காங்கிரஸ் இந்த தேர்தல் அறிக்கை கவர்ச்சிகரமாக இருப்பதால், மக்கள் கண்டிப்பாக காங்கிரஸை ஆட்சியில் அமர வைக்கும் என்று நம்புகிறார்கள்.
.
இதனிடையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே, பிரதமரை, "நச்சுப்பாம்பு" என்று விமர்சித்ததை பலரும் எதிர்க்கவே, தான் மோதியைக் கூறவில்லை, அவர் கொள்கையைச் சொன்னேன்" என்று சமாளித்து, பிறகு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோதி, காங்கிரஸ் தன்னை 91 முறை தனிப்படத் தாக்கியுள்ளது என்று கூட்டங்களில், பேசும் போது
குறிப்பிட்டு வருந்தினார்.
.
அதற்கு பதிலளித்த, பிரியங்கா வாத்ரா, மோதி கூட்டங்களில் தன்னை காங்கிரஸ் திட்டுகிறது என்று புலம்புவதாகவும் தன் சகோதரன் ராகுல் ,தைரியசாலி, பாராளுமன்றத்தில் தைரியமாகப் பேசி கேள்வி கேட்டார். அதனால் அவரை தகுதி நீக்கம் செய்தார் மோதி என்றும் பேசினார்.
.
மீண்டும் நேற்று, ஒரு கூட்டத்தில்,
கார்கேவின் மகன், பிரியங்க் கார்கே,
பிரதமர் மோதியை, " உதவாக்கரை மகன்", என்று தாக்கிப் பேசியுள்ளார்.
.
இதையடுத்து பாஜக புகார் செய்ததால், தேர்தல் கமிஷன், பிரச்சாரத்தில் பேசும் போது, நாகரீகம் கடைபிடிக்கப்பட வேண்டும் என கட்சிகளை அறிவுறுத்தியுள்ளது.
.
பிரதமர் மோதி, அமீத்ஷா இவர்களின் சூறாவளி சுற்றுப் பயணம், அண்ணாமலை தலைமையில் வியூகம், காங்கிரஸின் நாகரீகமற்ற பிரச்சாரம், நிறைவேற்ற இயலா வாக்குறுதிகள், பாஜகவை இரண்டாவது தடவையாக தொடர்ந்து ஆட்சியமைக்க வழிவகை செய்யும் என நம்பலாம்.
.
அதே சமயம், சில வேண்டாத சக்திகள் தேர்தல் நேரத்தில் குழப்பங்களை உண்டாக்க முயற்சிக்கலாம்.
..
கர்நாடக பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள், கட்சியின் வெற்றியை கருத்தில் கொண்டு,
தங்கள் மனவருத்தத்தை மறந்து உழைக்க வேண்டும்.
மத்தியில் அடுத்து பாஜக-மோதி ஆட்சிதான் என்ற நிலையில், மாநிலத்திலும் பாஜக வெல்வது, DOUBLE ENGINE GOVERNMENT, ஆக மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். உத்தரப்பிரதேசம் போல.உயரும்.
.
கர்நாடக மக்கள் தொங்கு சட்டசபைக்கோ, கூட்டணி அரசு அமையவோ வாய்ப்பளிக்காமல் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
..
அது அவர்களுக்கு நல்லது,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...