Thursday, May 18, 2023

முன்னோர்கள் வழிபாடு செய்தால்.

 #ன்று_வைகாசி_அமாவாசை இந்த மூன்று தானங்களை உங்கள் கையால் செய்து விட்டால் போதும். #ஏழேழு_ஜென்ம_பாவங்கள்_தீரும்.

🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
அமாவாசை என்றதுமே நம் நினைவுக்கு வருவது பித்ருக்கள் வழிபாடு. அடுத்ததாக செய்ய வேண்டியது குலதெய்வத்தின் வழிபாடு. இந்த இரண்டு வழிபாட்டையும் சரிவர அமாவாசை தினத்தில் யார் செய்து வருகிறார்களோ, அவர்களுடைய குடும்பத்திற்கு நிச்சயமாக கடுமையான கஷ்டங்கள் வராது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரவிருக்கும் அமாவாசை. பித்ருக்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணங்களை தவறாமல் கொடுத்து விடுங்கள். குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யுங்கள்.
🌑
சரி, இது பொதுவாக எல்லோரும் அமாவாசை தினத்தில் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறைதான். நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி நாம் ஒரு சில விஷயங்களை இந்த அமாவாசை நாளில் செய்வதன் மூலம், செய்த பாவங்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த அமாவாசை தினத்தில் நாம் செய்ய வேண்டிய மூன்று தானங்கள் என்னென்ன.?
🌑
*அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய 3 தானங்கள்:*
🌑
அமாவாசை என்றாலே அகத்திக் கீரையை வாங்கி பசு மாட்டிற்கு தானமாக கொடுப்போம். வாழைப்பழத்தை வாங்கி தானமாக கொடுப்போம். தவறு கிடையாது. இதை செய்யலாம். இது தவிர இன்னும் இரண்டு பொருட்களை வாங்கி பசுமாட்டிற்கு தானமாக கொடுப்பது மேலும் மேலும் நல்ல பலனை கொடுக்கும். அது என்ன பொருள் தெரியுமா.
🌑
பச்சரிசியும் வெல்லமும். அதேபோல அமாவாசை தினத்தில் ஒட்டுமொத்தமாக எல்லோரும் கொண்டு போய் அகத்திக்கீரை வாழைப்பழம் பச்சரிசி வெல்லம் என்று பசு மாட்டிற்கு வைத்தால் அது எவ்வளவு தான் சாப்பிடும். பசி என்பது தினமும் வரக்கூடியது தானே. நீங்கள் கொஞ்சம் பச்சரிசி கொஞ்சம் வெல்லத்தை வாங்கி போய் அந்த பசுமாட்டின் சொந்தக்காரர் கையில் கூட தானமாக கொடுக்கலாம். அதை அடுத்து வரக்கூடிய நாட்களில் அவர்கள் பசு மாட்டிற்கு உணவில் கலந்து கொடுத்து விடுவார்கள். ஆகவே அமாவாசை தினத்தில் எல்லோர் கையாலும் பசு மாட்டிற்கு உணவு வைக்க வேண்டும் என்று நினைத்தால் அது நல்லதாகவே இருந்தாலும், பசு எவ்வளவு தான் சாப்பிட முடியும். இதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். (உங்களால் எப்போதெல்லாம் பசு மாட்டிற்கு உணவு வாங்கி தர முடியுமோ அப்போதெல்லாம் வாங்கி கொடுத்தாலும் புண்ணியம் சேரும்.)
🌑
அடுத்தபடியாக ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். உங்கள் கையால் சமைத்த தயிர் சாதம், புளி சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை பழ சாதம், இப்படி ஏதாவது ஒரு சாதத்தை ஏழையாக இருப்பவர்களுக்கு உங்கள் கையால் சமைத்துக் கொடுப்பது நல்லது.
🌑
அமாவாசை என்றாலே காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சமைத்த சாதத்தை எச்சில் படாமல், எள்ளு சேர்த்து தயிர் சேர்த்து, காகத்திற்கு வைத்து விட்ட பிறகு நாம் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. காகத்திற்கு மட்டுமல்ல, மேல் சொன்ன இரண்டு தானங்களையும் நீங்கள் செய்து விட்டு, அதன் பிறகு நீங்கள் உணவு அருந்துவதுதான் முறை. மேல் சொன்ன இந்த மூன்று எளிமையான தானங்களை செய்வதன் மூலம் நிச்சயமாக நாம் செய்த பாவங்கள் குறையும். புண்ணியம் சேரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...