Thursday, May 18, 2023

நாட்டு நடப்பு (18.5.23).

 1 சிவகுமார் பணிந்து சென்று 'உதவி'யாக இருப்பது உறுதியாகி விட்டது. இன்னும் எத்தனை 'உதவி'கள் உருவாக்கப் படுமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

கர்நாடகாவில் வாக்ஃப் வாரியம் ஊர் ஊராக நிலத்தை ஆக்கிரமிக்கும் வேலையை ஆரம்பித்தாகி விட்டது ( குல்பர்கா இத்யாதி). ஊர் பச்சைக் குத்திக் கொள்ளவிருக்கிறது. காங்கிரஸ் ( நரசிம்ம ராவ் காலத்தில்) கரும் புள்ளி, செம்புள்ளி குத்திக் கொள்ள 1993ல் அரவம் இன்றி நாட்டைப் பங்கு போட்டுக் கொண்ட மாய்மால ஏற்பாடு!
2. தமிழ் நாட்டில் 2000 த்திச் சொச்சம் அரசு மேனிலைப் பள்ளிகளில், 480 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. வேனில் விடுமுறை, மற்றும் விருப்ப மாற்றங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்ததில் மிச்சம் இது. முதலில் நல்ல கணக்கு வாத்தியார் தேவை போல.
3. மலம் அள்ளல், மலக் குழியில் மாய்தல் - இவை கிளப்பும் ஜாதி அரசியல் தாண்டி, பிரதமரின் கழிப்பிடத் திட்டத்தில் பயன் பெற்றோர் எத்தனை? கழுவு நீர் மேலாண்மை எவ்வாறு திட்டமிடப் பட்டது ( இங்கு vs மற்ற மாநிலங்கள்?) சாவு இங்கு மட்டும் ஏன் சகஜம்? கழிவு நீர் ஏன் பம்ப் செய்து ஊர்திகளில் எடுத்துச் செல்ல எல்லாவிடத்திலும் ஏன் ஏற்பாடு / ஒருங்கிணைப்பு இல்லை? கேள்விகள் அதிகம். விடைகள் கிடைப்பதில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது காங்கிரஸ் கர்நாடகத்துல ஆட்சிய பிடித்தது. இன்னும் உள்ள செல்வாக்கு மாநில நிர்வாகத்தாலா அல்லது ராகுலின் செல்வாக்கா????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...