நாங்கள் படித்த காலத்தில் அதிக பட்சமாக 70 மதிப்பெண் தான் வாங்க முடியும். எந்த சப்ஜெக்டிலும் 100/100 மதிப்பெண் போடமாட்டார்கள்.
இப்போது நிறைய மாணவ மாணவிகள் 90-95 % க்கு மேல் மதிப்பெண் வாங்குகிறார்கள். நிறைய பேர் பல சப்ஜெட்களில் 100/100 வாங்குகிறார்கள்.
Liberalisation Policyதான். முன்பு CBSC, Metriculation, ICSC மாணவர்கள் 80 முதல் 85% வரை மதிப்பெண் பெற்று பொறியியல், மருத்துவம்,சட்டம், வேளாண்மை, போன்ற படிப்புகளில் பெருவாரியாகச் சேர்ந்தனர். அதன் கண் கொண்டு அன்றைய SSLC, இன்றைய HSC படிப்புக்களுக்கு தாராள மதிப்பெண் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதேபோல் தவறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இது மாநிலக் கல்வியை நாடும் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்தில் துவங்கப்பட்டு இன்று அது வெகுவாக தளர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பல காரணங்கள் உள்ளன. இப்போது ஒரு வார்த்தை பதில்கள் உள்ளன. முன்பெல்லாம் இலக்கணப் பிழை இல்லாத வாக்கியங்களில் எழுத வேண்டும். அதே போல் மதிப்பெண் கொடுக்கும் போதும் ஆசிரியர்கள் தாராளமாக மதிப்பெண்கள் கொடுப்பதில்லை, குறிப்பாக மொழித் தேர்வுகளில். இப்போது தேர்வுகளிலும் அரசியல் தலையீடு உள்ளது. பள்ளிகளும், குறிப்பாக தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற குறுக்கு வழிகளை சொல்லிக் கொடுக்கின்றனர். எல்லாம் வணிகமயமாகி விட்டது.
அப்ப உள்ள மாதிரி இப்போது இல்லை.கல்வியின் தரமும் மாறிவிட்டது.இன்ஜினியரின் பட்டதாரி என்கிறார்கள் தமிழும் சரியாக தெரியவில்லை ஆங்கிலமும் சரியாக தெரியவில்லை (அனைவரையும் குறிப்பிடவில்லை) உச்சரிப்பும் சரியாக வருவதில்லை
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை சார்..
ஏதோ ஒரு நிர்பந்தத்துல வாத்தியாருங்க இப்படி மார்க்குகளை அள்ளிக் கொட்டுறாங்கன்னு நினைக்கிறேன்..72 SSLC ல State first 540 னு நினைக்கிறேன். சாமிநாதன் என்கிற மாணவன்னு எனது எண்ணம்..
நான் படித்த ஒரு பதிவு, உண்மையா என்று தெரியாது.
இப்போது தேர்ச்சி பெறாத 6% மாணவர்கள் செப்டம்பர் தேர்வில் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
ஆக 100 சதவீதம் வெற்றி !
நல்லா கேட்டிங்க! அத்தனை பேரையும் நீட் போன்ற ஒரு தேர்வை எழுத வச்சா தெரிஞ்சுரும்..இப்படி டன் கணக்குலே மார்க் வாங்கற மாணவர்கள் நீட் என்றவுடன் ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள் என்பது ஒரு புரியாத புதிரே!
குறிப்பாக மொழியில் 100 மார்க் எடுத்தவர்களை, செய்தித்தாளை படித்து காட்ட சொல்லுங்கள். அவர்கள் மொழி வளம் தெரியும்.
No comments:
Post a Comment