மரணத்தை வரவேற்போம். கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும்.
உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்....
.
No comments:
Post a Comment