*
ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய தன்மை இந்த பிரபஞ்சம் முழுவதும் காணப்படுகிறது. அந்த வகையில் தாவரத்திற்கும் இந்த பண்புகள் உண்டு. ஒவ்வொரு தாவரம், ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டாக்கும். அந்த வகையில் வளர்க்கக்கூடிய இந்த செடிகள் அதிர்ஷ்ட அதிர்வலைகளை உண்டாக்கி, நமக்கு நன்மைகளை செய்யக்கூடியதாக இருக்குமாம். அப்படியான செடிகள் என்னென்ன? என்பதை தான் இந்த பக்தி தகவல்களின் மூலம் நாம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.*
*அதிர்ஷ்டம் தரக்கூடிய செடிகளில் ஒன்று கற்றாழை! கற்றாழையை விட ஒரு சிறந்த வீட்டில் வளர்க்கக்கூடிய செடி இருக்கவே முடியாது. கண்டிப்பாக அனைவரின் வீட்டிலும் கற்றாழை இருப்பது நல்லது. ஆனால் கற்றாழையை புதர் போல கொத்து கொத்தாக ஒரே இடத்தில் வளர்க்கக்கூடாது. ஒரு தொட்டியில் ஒன்றிரண்டு கற்றாழைகள் இருந்தால் போதுமானது.
கற்றாழை செடியை அதிர்ஷ்டத்திற்காகவும், வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள், கண் திருஷ்டிகளை விலக்குவதற்காகவும் வீட்டில் வளர்ப்பது உண்டு. கண் திருஷ்டிகளை நீக்க, முதலில் கற்றாழையை வாசலில் கட்டி தொங்கவிடுவதை பார்த்திருப்போம். அதுமட்டுமல்லாமல் கற்றாழை செடியை வீட்டில் முன்புறத்தில் தெருவில் செல்பவர்கள் கண்களுக்கு படும்படியாக முன்புறம் வைத்து வளர்க்க வேண்டும். இதனால் கண் திருஷ்டிகள் நீங்கும், அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும்.*
*சங்குப்பூ செடி வீட்டில் வளர்த்தாலும் அதிர்ஷ்டம் அள்ளி அள்ளி கொடுக்குமாம். சங்குப்பூ தெய்வம்சம் பொருந்திய ஒரு மென்மையான பூ. இந்த பூவின் நிறமே அவ்வளவு அழகாக இருக்கும். சங்குப்பூ வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்ட தேவதைகள் வீட்டில் வாசம் செய்யும். இதனால் துர் தேவதைகள் வெளியில் சென்று விடுமாம்.
பசலைக்கீரை! கீரை வகைகளில் இந்த கீரை ரொம்பவே வித்தியாசமான ஒரு கீரை வகையாக இருக்கிறது. இதன் தண்டு பகுதி பிங்க் நிறத்திலும், இலை பகுதி டார்க் பச்சை நிறத்திலும் இருக்கும். இந்த கீரையை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டங்கள் நிறையயுமாம். இந்த கீரைக்கு நேர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை உண்டு மேலும் ஆரோக்கியம் காக்கவும் உதவும். இந்த பசலை கீரை குளிர்ச்சி பொருந்தியது. உடல் உஷ்ணம் தணிக்க அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதன் சுவையும் அலாதியானதாக இருக்கும்.*
*எல்லோருடைய வீட்டிலும் வளர்க்கக்கூடிய ஒரு செடி மாதுளை செடி! மாதுளை செடியில், மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. மாதுளை இரத்த விருத்திக்கு அதிகம் சாப்பிடக்கூடிய ஒரு அருமருந்தாக இருக்கிறது. இது ரத்த விருத்தி மட்டும் அல்லாமல், குடும்பத்தின் சுபீட்சத்தையும் விருத்தி செய்து கொடுக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய இந்த செடியை பெரிய அளவில் வளர்ப்பதை விட, சிறிய தொட்டிகளில் சின்ன சின்ன செடிகளாக வளர்த்தால் பேரதிர்ஷ்டம் வருமாம்.
வெற்றிலை கொடி வீட்டில் வளர்ப்பதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒரு தாவரமாக இருக்கிறது. வெற்றிலை வெற்றியை கொடுக்கும் தாவரம் என்றும் கூறப்படுவதால், குடும்பத்தில் வெற்றிகள் குவிய, தொட்டதெல்லாம் ஜெயமாக, வெற்றிலையை வளர்க்கலாம். மேலும் வீட்டில் பூத்த வெற்றிலையை மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வர எதிரிகள் தொல்லை அகலும். வெற்றிலையை தனியாக வளர்க்கக்கூடாது, வேறு ஏதேனும் செடிகளுடன் சேர்த்து வளர்க்கலாம்.
முல்லைப் பூ! பூக்களின் ராணியாக இருக்கக்கூடிய இந்த முல்லை பூ, மிகுந்த வாசம் மிக்கவை. எல்லா விதமான தெய்வங்களுக்கும் சாற்றக் கூடிய ஒரு வகையான பூவாக இருக்கிறது. வாசம் மிகுந்த இந்த மலர் வீட்டில் இருந்தால், குடும்பமும் வாசம் நிறைந்ததாக, மகிழ்ச்சியுடன் இருக்குமாம். இதனால் அதிர்ஷ்டம் நிறையுமாம்.
No comments:
Post a Comment