Tuesday, May 9, 2023

ஏன் ஊழல் செய்பவர்களே திரும்ப திரும்ப ஜெயிக்கிறார்கள்?

 பெரும் பாலான குடும்ப பெண்களிடம் அரசியல் பற்றி கேட்டால் 'எனக்கு அரசியலே பிடிக்காது' என்கிறார்கள். சரி ஓட்டு போட்டீர்களா என கேட்டால், ம் போட்டேன் சூரியனுக்கு என்கிறார்கள். இல்லை இரட்டை இலைக்கு என்கிறார்கள்.

ஏம்மா அவங்க நிறைய ஊழல் செய்யறாங்க என நிறைய பேர் பேசறாங்களே என கேட்டால், அதெல்லாம் தெரியாது.
1) கணவர் சொன்னார் போட்டேன்..
2) அப்பத்தா காலத்திலிருந்து அதுக்கு தான் போடுவது வழக்கம். 3) காசு கொடுத்தாங்க போட்டேன்
4) யார் தான் யோக்கியம்...
இப்படி பதில் வருது.
ஆக நல்லவர்கள் யார்? ஊழல் செய்து சொத்து வாங்குவது யார் என்ற கவலையை அவர்கள் படுவதில்லை.
இன்னும் ஜோக் என்னவென்றால், இது பார்லிமென்ட் க்கான தேர்தலா? சட்டமன்றத்திற்கான தேர்தலா என்று கூட பலருக்கு தெரிவதில்லை.
இன்னைக்கு ஓட்டு போடனும். போட்டாச்சு.
இனி இந்த கவலை அடுத்த தேர்தலின் போது தான்.
அரசியலை தெரிந்து கொள்வதே பாவம் என நினைக்கிறார்கள்.
இப்படி இருந்தா எப்படி நல்லவர்களை அதிகாரத்தில் உட்கார வைப்பது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...