Wednesday, May 17, 2023

நாட்டு நடப்பு.

 1. கள்ளச் சாராயம் காய்ச்சுவது காலம் காலமாக நடப்பது .மரக்காணம் பகுதியில் 400 மில்லி 'மூலை கடிச்சான்' ( பிளாஸ்டிக் பை மூலையைக் கடித்து உரிஞ்சுவது) ரூ 40 விலை ( விற்பனை சரிந்தால் ரூ 20 அல்லது ரூ 40க்கு 2 பாக்கெட்!). இது நல்ல சாராயம் போல. லைசன்ஸ் இல்லாதது. உயிர் கொல்லி வேறு. அது 'விஷ சாராயம்' - தொழிற்சாலையில் பயன் படுத்தப் படும் 'எத்னால்'. இது காவல் துறைத் தலைவர் நுணுக்க விளக்கம்.இதை அறவே தடை செய்ய வழியில்லை. அனாவசியமாக 'கள்ள சாராயத்தின்' பெயரைக் கெடுக்க வேண்டாம்.

2. இந்த மாதிரி சம்பவங்களால் மாநில அரசின் நிர்வாகத்தின் பெயர் கெடுகிறதாம். சரி, 12 கலெக்டர் உட்பட 48 உயர் அதிகாரிகளை உடனே இடம் மாற்றுவது தானே துரித, முறையான நடவடிக்கை? இவ்வாறு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூண்டு கூண்டாக மாற்றல் செய்வது என்ன சாதனை? என்ன விரயச் செலவு லட்சக் கணக்கில்? நினைவிருக்கிறது 1960களில் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக் குழு குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது ஒரு பதவியில் நீடிக்காமல், பணி ஒழுக்கம், திறன், தாக்கம் இவற்றைக் கணிக்க முடியாது எனப் பரிந்துரை செய்தது. ( லஞ்ச ஊழல் கேஸ்கள் விதி விலக்கு) பின்னர் சில மாநிலங்கள் ( முதல்வர்கள்?) குறுக்கிட்டு இதை 2 ஆண்டுகளாக ஆக்கியதாக நினைவு. இப்பொது வழிமுறை இல்லையோ? இந்தியில் 'ஆயா ராம், கயா ராம்' என்பார்கள் ( ஒரு ராம் வந்தார், ஒரு ராம் போனார்!)
3. இங்கிலாந்தில் இந்தியாவில் ஜனநாயகம் மரித்து விட்டதாக முழக்கி பல நாடுகளில் பெரும் தாக்கத்தை எழுப்பிய ( மேற்கத்திய பத்திரிகைகள் செய்திப் படி) ராகுல் காந்தி இப்போது மே 31- ஜூன் 10 கால கட்டத்தில் அமெரிக்கா சென்று 5000 இந்தியர்கள் கூடும் சதுக்கத்தில் முக்கிய உரை ஆற்ற உள்ளார்.
இந்த தேதிகள் அப்படியே எங்கள் ஊர் பெருமாள் பிரம்மோத்ஸவத்தோடு ( காஞ்சி வரதர்) ஒத்துப் போவதால் இங்கு காஞ்சியில் இருந்த படியே அமெரிக்க வாழ் இந்தியர்களின் தேச பக்தி, குடியுரிமை வைராக்கியத்தின் தற்போதைய பரிணாமத்தை அளந்து கொள்ளலாம். பச்சை அட்டைக் கனவுகள் குறுக்கிடாது போல. காஞ்சியிலும் காலை உற்சவங்கள் , மாலை உற்சவங்கள் அதிகாலை விழிப்பு 3 AM, இரவு படுக்கை 1130 PM என்று பல நூறு ஆண்டுகள் வழக்கமாதலால் , எங்கள் நடமாட்டமும் அமெரிக்காவுக்கு சளத்ததல்ல.
4. மத்திய நிதி அமைச்சர் இந்தத் தவணையில் வேலை நியமனம் பெறும் சில ஆயிர இளைஞர்களில் 250 அளவில் சென்னை சார்ந்தவர்களுக்கு மேடை அமைத்து உத்தரவுகளை வழங்கினார் ( அஞ்சல் துறை, ரேயில்வே, சுங்கத்துறை இடை நிலைப் பணிகள்). நினைவுக்கு வருகிறது UPSC மூலம் மத்திய அரசு Assistants grade என்ற இடைநிலை தேர்வில் (1960கள்) 60000 பேர் எழுதி அடியேனுக்கு இந்தியாவில் 2ம் இடம் கிடைத்தது. முதல் பத்து பேரில் முதலில் பார்த்தசாரதி ( சென்னை) இரண்டாவது நான், மூன்றாவது நாராயண நம்பூதிரி ( திருவனந்தபுரம்) என 5 பேர் தென் மாநில மாணவர்கள். நான் பட்னா நகரில் தேர்வு எழுதியதால் அவ்வூரில் அது அக்கால சாதனை. பத்திரிகைகளில் பெயர் வந்தது. சென்னையில் வெறும் பதிவு எண் மட்டும் வந்தது. பாவம் பார்த்தசாரதி!
முன்னிலை இடம் பெற்றதால் நான் 4 ஆண்டுகள் வெளியுறவுத் துறையில் இருந்தேன் .பின்னர் IAS தேர்வு மூலம் முதல் நிலை பதவிகளுக்கு ( I A&AS, IRS முதலியன) நியமனம் செய்யப் பட்டும், மருத்துவ ரீதியாக ( வலது கண் பார்வை கூர்மை குறைவு - சரி செய்த கண்ணாடி பவர் அதிகம்) பதவி மறுக்கப் பட்டதால், வேலை துறந்து தனியார் துறைக்கு மாறி விட்டேன். அது ஒரு சகாப்தம்! லால் பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் அமர்ந்து பணி செய்த காபின் அமைந்த நீண்ட தென்னண்டை அமைச்சக வராந்தாக்களில் பலமுறை சென்றதுண்டு. அக்காலங்களில் ID card மட்டும்
தேவை. வேலை செய்ய ஊக்குவிக்கப் பட்டோம்.
பல முறை பின்னர் நினைத்ததுண்டு , சினத்தில் வேலையை விடாமல் இருந்தால், ஆனை படுத்தாலும் குதிரை மட்டம் என்று உதவி அல்லது துணைச் செயலர் பதவி வரை ஊர்ந்து சென்று இன்று நல்ல ஓய்வூதியம் பெற்றிருக்கலாமோ என்று. தனியார் துறையும் குறைவு வைக்கவில்லை. சேர்ந்த நாள் முதலே பறந்து செல்ல அனுமதி, சொகுசு இருந்தது.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்னனோடு ஒரு சுதந்திர தின மாலை (1966) தேனீர் விருந்து 300 விருந்தாளிகள் சூழ ராஷ்ட்ர பதி பவனில் கிடைத்தது இங்கு கிடைக்க வாய்ப்பில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...