ஓரு வழியா கர்நாடகா நாடகா முடிவுக்கு வந்த மாதிரி இருக்கு. எனக்கென்னவோ இனிமே தான் கிளைமேக்ஸ் இருக்கும்னு தோணுது. கிடைச்சா சி.எம்.போஸ்ட், இல்லேன்னா வெறும் எம்.எல்.ஏதான்னு சிவகுமார் சொல்லி இருந்தார். இப்போ என்ன செய்யப் போறார்.
ஒரு திட்டத்தை அறிவிச்சி அதை அமல்படுத்தவே நாலு வருஷம் ஆயிடும். அதுக்குள்ள வேற ஒருத்தர் சேர்ல உட்கார்ந்துட்டார்னா, அந்த திட்டம் என்ன ஆகும்? continuity இல்லேன்னா என்ன ஆகும்?
மீட்டிங் முடிஞ்சி வந்த சித்தராமையா முகம் செத்துக் கிடந்தது. கையை, காலை கட்டிப் போட்டுட்டு ஓடுன்னா அவர்தான் என்ன பண்ணுவார்? பொதுவா இது ரெண்டு பேருக்குமே திருப்தி இல்லாத முடிவு.
இப்பிடி எல்லாம் ஒரு ஆட்சியை நடத்த முடியுமா? வீணாப் போறதுக்கான வழின்னுதான் தோணுது.
No comments:
Post a Comment