
அப்புகாரில், ‘’உத்தங்குடி நாகர் ஆலயத்திற்கு சொந்தமான தர்ம சாஸ்தன டிரஸ்ட்டுக்கு நாகேந்திர அய்யர் என்பவர் 1936ம் ஆண்டு 23 ஏக்கர் நிலத்தை வழக்கினார்.
அப்போது இந்த நிலத்தை யாருக்கும் விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்கலாம் என்று போலியாக ஆவணம் தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு கோவையை சேர்ந்த லாட்டரி ஏஜெண்ட் மார்ட்டின் என்பவர் பத்திரத்தை அவர் பெயரில் பதிவு செய்தார். அதன் பிறகு முன்னாள் திமுக அமைச்சர் அன்பழகனின் உறவினர் சுகுமாறன் என்பவருக்கு பவர் பத்திரம் மாற்றி தரப்பட்டது.
இந்நிலையில் தயா சைபர் பார்க் நிர்வாக இயக்குநர் காந்தி அழகிரி பெயரில் பத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த இடம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலி ஆவணம் தயார் செய்து விற்கப்பட்டுள்ளது.
50 கோடி மதிப்பிலான இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதாகும். எனவே அதனை மீண்டும் கோவிலுக்கு மீட்டுத்தர வேண்டும்’’ என்று கூறப்படுள்ளது.
No comments:
Post a Comment