Saturday, July 2, 2011

தமிழ் இலக்கியத்திற்கு தி.மு.க என்ன செய்தது?-சாரு நிவேதிதா





சாரு நிவேதிதா துக்ளக்கில் எழுதி வரும் தொடர் கட்டுரையில்,தி.மு.க தமிழ் இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை என
எழுதியுள்ளார்.அதிலிருந்து ஒரு பகுதி; 

சென்ற ஆண்டு நடந்த என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவின் போது,மேடையில் இருந்த பல இலக்கிய வாதிகள் தி.மு.கவை சார்ந்தவர்களாக இருந்ததால் ,சில நண்பர்கள் ஏன் தி.மு.கவினரை மட்டும் அழைத்திருக்கிறீர்கள்..?என்று கேட்டார்கள்.தி.மு.கவை நான் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்த போதும்,இலக்கிய நட்புக்காக வந்திருந்தார்கள் அந்த தி.மு.க இலக்கியவாதிகள்.அந்த விழாவில் நான் பேசிய போது,அ.தி.மு.க நண்பர்களையும் அழைக்கலாம்தான்.ஆனால் அந்த கட்சியில் இலக்கியம் படிப்பவர் ஒருவர்தான் இருக்கிறார்.அவருக்கு என்னை தெரியாதே ?என்றேன் வேடிக்கையாக.  



ஜெயலலிதா எம்.பி யாக இருந்தபோது அவருடைய பாராளுமன்ற உரைகளில்,அவருடைய இலக்கிய வாசிப்பு தெரிவதை சுட்டிக்காட்டி குஷ்வந்த சிங் எழுதியிருந்தது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது,இலக்கியம் என்றால் பாரதியாரோடு நிறுத்திக்கொள்ளாமல் சமகால இலக்கியத்தையும் அ.தி.மு.க வினர் அறிந்துகொள்ள வேண்டும்.முதல்வர் சொன்னால் அவர்கள் கேட்பார்கள்.இந்தியாவில் வங்காளம்,கேரளம்,மராத்தி,ஆங்கில இலக்கியத்தை விட தமிழின் சமகால இலக்கியம் பெரும் சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.
 

அருந்ததி ராயின் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’’ஸை விட சிறப்பான பல நாவல்கள் தமிழில் உண்டு.ஆனால் இந்த சாதனைகளுக்கும் தி.மு.க வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.சில இலக்கியவாதிகள் தி.மு.க வில் இருந்தார்களே ஒழிய ,தமிழ் இலக்கியத்திற்கு தி.மு.க எதையும் செய்ததில்லை.இந்நிலை மாறி அ.தி.மு.க விலும் இலக்கிய ஆர்வம் ஏற்பட வேண்டும்.
 
டெயில் பீஸ்; ஒரு பலகலை துணைவேந்தர்,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு அனுப்ப போவதக சொன்னார்.அனுப்பி விட்டாரா அல்லது அவரும் திஹாருக்கு போய்விட்டாரா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...