Monday, July 4, 2011

இன்று அழுவது அழகிரி...! நாளை...?


   ற்ற கட்சி தலைவர்களுக்கு அந்த திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் திமுக தலைவர்களுக்கு அந்த திறமை எப்போதுமே அலாதியாக உண்டு

அதாவது கட்சி தொண்டர்களை எப்பாடு பட்டாவது சிந்திக்க முடியாமல் செய்வது ஆகும்

 திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு வாங்கித் தீருவேன் என்றும் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றும் மேடை தோறும் வாய்கிழிய பேசினார்கள்


  மத்திய அரசு பிரிவினை வாத தடுப்பு சட்டம் கொண்டு வந்ததோ இல்லையோ தங்களது திராவிட நாட்டுக் கொள்கையை தூக்கி உடப்பில் போட்டுவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள்

 தனிநாடு கோரிக்கை கைவிட பட்டது பற்றி தொண்டர்கள் யாரும் சிந்தித்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தங்களது நாத்திக சிந்தனையை பற்றி கூட கவலை படாமல் திருமூலரை துணைக்கு அழைத்து கொண்டனர்

 அவசர நிலை காலத்தில் இந்திரா காந்தி அம்மையாரை வாய்க்கு வந்தப்படி பேசிவிட்டு எம்ஜியாரை தொற்கடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக என பட்டு கம்பளம் விரித்து வாய்பந்தல் போட்டார்கள் 


    அப்போதும் தொண்டர்கள் சிந்தித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மிக ஜாக்கிரதையாக எம்ஜியாரும் மொரார்ஜி தேசாயும் நாட்டை காட்டிக் கொடுக்க போகிறார்கள்

 தேசத்தையே காப்பாற்ற திமுக வால் தான் முடியும் என திருமதி காந்தி கெஞ்சி கூத்தாடி கேட்டதாகவும் அதற்காகவே காங்கிரசோடு தோழமை கொண்டதாகவும் கதை அளந்தார்கள்

 இப்படி எத்தனையோ மாயஜாலங்களை காட்டி தொண்டர்களை மதி மயக்குவதில் திமுக தலைவர்கள் பலே கில்லாடிகள்

  ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளவு தான் ஜிகுணா வேலைகளை நடந்து முடிந்த தேர்தலில் செய்தாலும் குடும்ப அதிகார போதையில் அடிமட்ட தொண்டன் வரைக்கும் கூட மறைக்க முடியாமல் போய்விட்டது


 குழந்தையின் வெள்ளி கொடியை அடகுவைத்து மனையின் தாலியை விற்று திமுக கொடி ஏற்றி ஊர்வலம் போன தொண்டன் தன்னை மிதித்து தனது ரத்தத்தை குடித்து வாழ்வது தான் கோபாலபுரத்து கோமகனின் வாடிக்கை என்பதை அழகிரி தயாநிதி கனிமொழி போன்றோரின் கழக பிரவேசத்தை வைத்து நன்றாக அறிந்து கொண்டான்

அதனால் தான் முடிந்த தேர்தலில் தனது முடிவை மாற்றி பதிவு செய்தான்

 இது பொறுக்குமா தாங்க முடியுமா திருகுவளையின் வாரிசுகளுக்கு

 நேற்றுவரை கைகெட்டி வாய்பொத்தி வளைந்து நின்ற தொண்டன் இன்று சிந்திக்க ஆரம்பித்து மார்பை நிமிர்த்தினால் எப்படி தாங்க இயலும் 


 அதனால் தான் அஞ்சாநெஞ்சன் அழகரி குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என ஒரு திருமண விழாவில் அழாத குறையாக சொல்லியிருக்கிறார்

 அவரது ஆற்றாமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது

 மனோன்மணியம் என்ற தமிழ் நாடக காப்பியத்தில் குடிலன் என்ற அமைச்சன் பொது ஜனங்களை பற்றி பிடித்தால் கற்றை விட்டால் கூளம் என்று சொல்வதாக ஒரு வசனம் வரும்

 திராவிட பரிவார கட்சிகள் அனைத்துமே மக்களை பற்றி இத்தகைய கணிப்புகள் தான் வைத்து இருக்கிறது


   தான் என்ன கூத்து அடித்தாலும் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் மக்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் மறந்து விடுவார்கள் பாவம் அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றன

 அந்த நினைப்பிற்கு நெத்தி அடி கிடைத்ததும் புலம்பி திரிகிறார்கள்

 இந்த இடத்தில் திமுக காரர்களும் மற்றய கட்சி காரர்களும் ஒரு உண்மையை உணரத் தலைப்பட வேண்டும்

 மக்கள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் அல்ல நீங்கள் நினைத்தப்படி ஓட்டி சென்று விடலாம் என கனவு காண்பதற்கு

 இனி எங்களை யாராலும் விழ்த்த முடியாது நாங்கள் ஆலமரம் போல் விழுதுகள் விட்டு தளைத்து விட்டோம் ஆயிரம் அராஜகம் செய்தலும் தட்டி கேட்க ஆள் கிடையாது என வீராப்பு பேசிய ஒரு குடும்பமே இருந்த இடம் தெரியாமல் மக்கள் சக்தி முன்னால் போய் விட்டது


  இதே நிலைமை நாளை யாருக்கும் வராது என்று சொல்ல இயலாது

 தனிப்பெரும் வலிமை தனக்கு இருக்கிறதே என்ற தலைக்கனத்தில் வரம்பு மீர நிலைப்பவர்கள் இன்று அழகிரி வருத்தப்படுவது போல் வருந்த வேண்டிய நிலை உருவாகி விடும்

 இதை மனதில் வைத்து செயல் பட்டால் தான் நிம்மதியாக காலம் தள்ள இயலும்

 செருப்பு போட மாட்டேன் காலால் நடக்க மாட்டேன் கோவிலுக்கு போகாமல் கோட்டையில் தான் பூஜை செய்வேன் என்று துதிபாடும் கூட்டத்தாரின் புகழ் மாலைக்கு மயங்கினால்....

 நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை அவர்களுக்கே இது புரியும்!
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...