Wednesday, July 6, 2011

சன் "டிவி'க்கு கேபிள் பதித்த பிரச்னை :விரைவில் நடவடிக்கை என ஜெயலலிதா பேட்டி

""சென்னை நகரில், சன் "டிவி'க்கு, சட்டவிரோதமாக "ஆப்டிக் பைபர் கேபிள்' போடப்பட்டது குறித்து சென்னைக்கு திரும்பியதும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.



டில்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:அதிகாரமற்ற வகையில், தயாநிதி மாறனின் இல்லத்தில் இருந்து, சன் "டிவி' அலுவலகம் வரை ஆப்டிக் பைபர் கேபிள் போடப்பட்டதாக செய்தி பார்த்தேன்.
நான், மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பணியில் தற்போது மும்முரமாக உள்ளேன். இதனால், சென்னைக்கு திரும்பியதும் இந்த விவகாரம் பற்றி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பேன்.கடந்த ஜூன் 14ம் தேதி டில்லி வந்திருந்தபோது பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமான நிதியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டுமென மனு அளித்தேன். அதே கோரிக்கையை இன்றைய கூட்டத்திலும் வலியுறுத்துவேன்.சென்னையில், ராணுவ குடியிருப்பில் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட செயல் மன்னிக்கவே முடியாத ஒன்று. குறிப்பிட்ட அதிகாரியை, தமிழக காவல்துறையிடம் சட்டப்படி ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி, தலைமைச் செயலர், ராணுவத்தின் தென்பிராந்திய தலைமை தளபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.



தயாநிதியை நீக்குங்கள் ஜெயலலிதா ஆவேசம்:""தயாநிதி மீதான குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. தார்மீக பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகும்படி தயாநிதி கேட்டுக் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நீக்கம் செய்திட வேண்டும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


டில்லியில் மத்திய திட்டக்கமிஷன் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 3.30 மணியளவில், முதல்வர் ஜெயலலிதா வந்தார். தமிழகத்துக்கு உண்டான மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அவர், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, மிகுந்த பரபரப்பை கிளப்பியது.இது குறித்து ஜெயலலிதாவிடம் கருத்து கேட்பதற்காக நிருபர்கள் குவிந்தனர்.


தனது பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு வெளியில் வந்தவுடன், நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தயாநிதி குறித்து கூறப்பட்டிருக்கும் தகவலை கூறினார்.சி.பி.ஐ., தனது கடமையை ஒழுங்காக செய்து வருகிறது. எனக்கு இதில் பரமதிருப்தி. தயாநிதி மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து நானும் பலமுறை எடுத்து கூறிவிட்டேன். இவ்வளவு தாமதத்திற்கு பிறகாவது சி.பி.ஐ., தனது கடமையை செய்திருக்கிறது; மகிழ்ச்சி. தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும்படி தயாநிதி கேட்டாலும் கூட, அதில் எந்த பிரயோஜனம் இல்லை. அவர் பதவியை விட்டு விலகமாட்டார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பதிலளித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...